பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை...
தனிமனித ஒழுக்கம் இல்லா மனித மிருகங்கள் உலாவருகிறது...
மனிதத்தை தொலைத்த அவமானச்சின்னங்கள் எழும்பியவண்ணம் உள்ளது...
குற்றமனசாட்சியில்லா சீர்கெட்ட பிறவிகள் அலைகிறது...
பாவக் காரியங்களை துணிந்து செய்கிற சமூகப்பிணியாளிகள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்...
அடையாளம் காணமுடியாத அலங்காரத்தோற்றத்தில் அருவருப்புகள் ஊடுருவி இருக்கின்றன...
பாலுணர்வு கொம்புசீவி விடப்படும் காரியங்கள் களைந்து எறியப்பட்ட வேண்டும்...
இணையம் மூலம் பரவும் இச்சை இம்சைகள் ஒழிக்கப்பட வேண்டும்...
சினிமா கவர்ச்சியில் வீழும் இளமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்...
கடும்சட்டங்கள் மூலம் தண்டனை பயம் விதைக்கப்பட வேண்டும்...
அன்பினால் கவரும் ஆன்மீகமோ, அதிகாரக்கரங்கள் கொண்ட அரசாங்கமோ துரிதமாக செயல்பட வேண்டிய நேரமிது...