எங்கிருந்து வந்தாய் எழில்நிலவே
எங்கிருந்து வந்தாய் எழில்நிலவே வானத்தில்
திங்களென்ற பேரில் தினம்வளர்ந்து தேய்கின்றாய்
மங்கையோடு ஒப்பிட்டால் மௌனமாய் நீரசிப்பாய்
செங்கதிர் போனபின் செவ்வானில் நீவருவாய்
திங்களும் தோற்றிட தேனிதழா ளும்வருவாள்
சங்கத் தமிழேநீ பாடு
---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா