கண்களால் காதல் நீ பேசினால்

தாலாட்ட தென்றல் தனியாக நிற்கிறாய்
நூலாடும் மெல்லிடை நோகாதோ சொல்லடி
சேலாடும் கண்களால் காதல்நீ பேசினால்
கோலாட்டம் போடுதேநெஞ் சம்

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

---காலா நூலா சேலா கோலா அடி எதுகை
---தா த நூ நோ சே கா கோ சம் 1 ஆம் 3 ஆம் சீர் மோனை


தாலாட்ட இளந்தென்றல் தனியாக நிற்கிறாய்
நூலாடும் மெல்லிடைதான் நோகாதோ சொல்லடி
சேலாடும் கண்களினால் காதல்நீ பேசினால்
கோலாட்டம் போடுதேநெஞ் சம்கொஞ்சம் பாரடி

---காய் காய் காய் விளம் எனும் வாய்ப்பாடு
அடிதோறும் அமைந்து வந்த கலிவிருத்தம் பாவினம்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Nov-24, 10:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

மேலே