புனிதன் வந்தான் மாய மதனன் வந்தான்

புனிதன் வந்தான்


புனிதன் வந்தான்
புள்மேல் அன்று
தனியாய் இருந்தேன் துக்கி - கனிவாய்
கனியன் சேர்ந்தான்
கண்ணுடன் இணைந்து
தனியள் மகிழ்ந்தேன் அன்று.




அந்நாள் வந்தாய்

அருளும் மணியே

இந்நாள் வரைஉன் நினைப்பு - தந்தாய்

மணியாய் ஒளிரும்

மெய்தான் ஒன்று

துணிவாய் அடைவேன் பிறப்பு.

மதனன் வந்தான்


மதனன் வந்தான்

நேரில் அன்று

இதமாய் இருந்தோம் வெட்கி - பதமாய்

இதமாய் சேர்ந்தோம்

ஒன்றாய் இணைந்து

சுகமாய் மகிழ்ந்தேன் அன்று.


அந்நாள் வந்தாய்

இருளும் மருளே

இந்நாள் வரைஉன்

கசப்பு - தந்தாய்

மருளும் இருளே

பொய்தான் ஒன்று

கருநான் அடையேன் பிறப்பு.



*************************************************

எழுதியவர் : GoldenVibes (25-Nov-24, 9:15 pm)
சேர்த்தது : பொன் அதிர்வன்
பார்வை : 12

மேலே