எழுந்து வா இளைஞனே
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*எழுந்து வா*
*இளைஞனே!*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வெற்றி மாலையை
விரும்பும் நீ !
போர்க்களத்தை
வெறுக்கலாமா...?
பதக்கங்களுக்கு
ஆசைப்படும் நீ !
போட்டியை
அலட்சியப்படுத்தலாமா...?
எழுவதற்கு
பெருமைப்படும் நீ
விழுவதற்கு
வெட்கப்படலாமா.....?
சாதனைப் பட்டத்திற்குத்
துடிக்கும் நீ !
வேதனை
வட்டத்திற்குள் அடங்கலாமா?
உயர்வதற்கு
நினைக்கும் நீ !
உழைப்பதற்குத் தயங்கலாமா...?
கைதட்டலுக்கு
ஏங்கும் நீ
கைகட்டி நிற்கலாமா ....?
காலத்தையே
வெல்ல நினைக்கும் நீ!
சோம்பேறித்தனத்திடம்
தோற்கலாமா....?
எழுந்து வா இளைஞனே!
வரலாறு
காத்திருக்கிறது
உன் வருகைக்காக.....!!
*கவிதை ரசிகன்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥