அருள்நிலை
இறைவா என்று வணங்கிடத்தான் நினைக்கிறேன்
இறைநிலை தெரியாமல் கண்மூடி வணங்க, மனமற்று போகின்றேன்.
என்னுள் இருக்கும் அனைத்தையும் ஆராயச் செய்தாய் இறைவா,
உன்னை நானும் எங்கென ஆராய்வேன்,
நீ இல்லை என்பது எந்த ஆராய்ச்சியாரின் கூற்றோ
இருக்கிறாய் என்பது எந்த ஆன்மிகவாதியின் கூற்றோ
நான் அறியேன்
உன்னையும் என்னை அறியச்செய்வாய் என்னையும் மனிதனென்று உலகில் வாழச்செய்வாய்...
-அருள்