மது மாது

மான் விழி கொண்ட மாது
மது சுவை அறிய விழையும் மடந்தை
கண்ணாடியில் உன் பிம்பம் மட்டும் தான் காண்பாயோ
எனில் இன்று முதல் கூர்ந்து நோக்கு
உன் விழியிர்புவிசையினில் மிதந்தேனே
இந்த புவியிர்புவிசையினை மறந்தேனே
இதழோரம் சிந்தும் சிறு புன்னகையில்
காலம் மறந்து சொக்கி கிடப்பேனே
உன் சிறு பல் தெரியும் சிரிப்பு தரும் கிறக்கம்
நெடு மரம் இறக்கும் கல்லு தந்திடுமோ
அல்லது உலகையே மறக்கசெய்யும் உன் விழி தரும் போதையை
மேல்நாட்டு மதுவில் கிடைத்திடுமோ

எழுதியவர் : தினேஷ் ஏ (6-Sep-18, 3:56 pm)
சேர்த்தது : தினேஷ் ஏ
பார்வை : 87

மேலே