மதுவும் மாதுவும்

என்னை பார்த்தால் ஆசை வரும்!

ஏதேதோ பொய் சொல்வாய்
எனை காண

ஏமாற்றி எனை தொடுவாய்

என்னை தொட்டால் உன்னை மறந்து
உன்னுடைய எல்லாம்
மறந்து
என்னுடனே
நைந்து போவாய்

வந்த வழி மறந்து போகும்
வேறு
எந்த வழியும்
இன்றி இருந்து
வாழ்வாய்

ஏதேதோ பிதற்றுவாய்
தன் நிலை இழந்து துயில் கொள்வாய் என் மடியிலேயே

எல்லாம் இழந்தும்
என் கதி சரண் அடைவாய்
ஏனெனில்
நான் இன்றி
நீ இல்லை
எனை அன்றி
யார் தருவார் !

இந்த சுகம்!

எனக்கும் அதற்கும்
ஒரு துணை எழுத்து தான்
கூட குறைய
நான் மது
அவள் மாது - ஆனாலும்
இருவருக்குமேஒரே குணம்!
எப்போதும்
மயக்கத்திலே
(போதை) !

எழுதியவர் : த பசுபதி (6-Sep-18, 4:37 pm)
பார்வை : 90

மேலே