பசுபதி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பசுபதி
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  04-Jul-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Sep-2018
பார்த்தவர்கள்:  1669
புள்ளி:  117

என் படைப்புகள்
பசுபதி செய்திகள்
பசுபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2020 10:43 pm

பூக்களே

நீ

விழும் போது

நான் வாழ்கிறேன்

இப்படிக்கு

பூக்காரி...

மேலும்

பசுபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2020 7:41 am

மழை...
-----------

உப்பு  நீரை

அருந்தியதால்

கண் கலங்கியதோ

மேகம்

மழையென...


வானம் அழுதது

பூமி சிரித்திட...


மண்ணின் காதலை

அணைத்து கொள்ள

மழையென

புறப்பட்டதோ வானம்...

உருண்டு புரண்டதெல்லாம்

காமத்தில் சேரும் !

முதலில் தூறல் முத்தத்தில்

தொடங்கி...கறுப்பு  குடை

கொண்டு தடை

செய்தாலும்

நீர்

கொடை கொடுப்பதில்

தவறுவதில்லை

காலம் பார்த்து...

மேலும்

nandru.. 17-Jun-2020 7:50 am
பசுபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2020 8:01 am

காலம் எழுதும்

முதுமை  ஓவியம்

தலையில் தொடங்கி...

மேலும்

பசுபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2020 7:45 am

கடவுளின் கையில்

பேனா மை

தீர்ந்ததோ

இவன் தலை எழுத்தை

எழுதும் போது...

மேலும்

பசுபதி - பசுபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2020 12:49 pm

' ஏன்டா ஏதாவது ஒரு வேலைக்கு போகக் கூடாதா இப்படியே சுத்திகிட்டே இருக்கியே என மரகதம்  முணுமுணுத்து கொண்டிருந்தாள், இதை கேட்டுக் கொண்டிருந்த ராம், நானும் தேடிக்கிட்டுதான்   இருக்கேன் ம்ம்.. வேலை தான் கிடைக்க மாட்டேனுது.. என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

அம்மா' நான் வெளியே போய்ட்டு வரேன் என கிளம்பியவனை மரகதம் தடுத்தாள்,  இருடா காலையில வெறும் வயத்துல வெளியே போகக்கூடாது  ன்னு  ஒரு டம்ளர் பால் கொடுத்தாள்.

ராம் நேராக தன் நண்பன் வினோத் வீட்டிற்கு சென்றான். வாடா உன்னதான்  எதிர்பார்த்திட்டு இருக்கேன் என்றான் வினோத். என்னடா விஷயம் , நேத்து ஒரு ஐடியா தோனுச்சு அதான் ஒன்கிட்ட share பண்ணலாம்னு ' என்

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி 06-May-2020 10:13 am
அருமை 05-May-2020 10:19 pm
பசுபதி - பசுபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2019 10:26 am

மென்மையான

பெண்மையே

உறுதி கொண்ட

மனதினாய்

உள்ளம் பூக்கும்

அன்பினாய்

சேவை செய்யும்

மனிதமே

உன்னையன்றி

உலகம்

இயங்குமா ?

சிறிய

விதைக்குள்

மாமரம் போல

உனக்குள்

எத்தனை

உருமாற்றம்

பெருமை

கொள்கிறேன்

பெண்ணாக...

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...
🌻🌻🌻🌻🌻

மேலும்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே 15-Mar-2019 5:22 pm
அருமை 15-Mar-2019 1:36 pm
தமிழ்க்கிழவி அளித்த படைப்பில் (public) Thamizhkkizhavi5bb9b766ae8e1 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Feb-2019 10:42 am

ஈர்மூன்றறிவென்று மார்தட்டும் மனிதகுலம்
பார் நியதியிதை! ஓரொருவர்க் கோர்குணமாம்

குணத்தால் வேறுபட்டும், கணப்பொழுதே ஆயிடினும்
மனச்சாட்சிப் படிநடத்தல் மனிதரெம் மாட்சியடா!

ஆறறிவு படைத்திருந்தும் மாறுகிற குணம்படைத்தோர்
கூறியஇவ் இலக்கணம்அம் மாறுநிற மனிதர்க்கில்லை

கள்ளம், கபடமொடு காழ்ப்பு நிறைமனத்தோர்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடுவார்

நிசத்தை நினைப்பறிந்தும் நேரமொரு மொழிபுகல்வார்
பசுத்தோல் அணிந்தபுலி! பத்திரம், என் நண்ப!

அகம்காட்டா முகமுடையார், அறமென்றால் ‘என்ன?’வென்பார்
முகத்துதி செய்வதிலோ முடிசூடா மன்னரிவர்!

காரியமாகும்வரை நீஅவர்க்குக் கறியாவாய்!
காரியமான பின்னோ கறிவேப்பிலை ஆவாய்!

செப்பு

மேலும்

வாழ்க்கை தந்த ஞானோதயம் தான்... பாராட்டுக்கு நன்றி பசுபதி அவர்களே:) 22-Feb-2019 3:55 pm
மனிதரை படித்துள்ளிர் நல்ல புரிதல். அருமையான வரிகள். 22-Feb-2019 9:16 am
மிக்க நன்றி தமிழ்ப் பிரிய கவின் அவர்களே:) 21-Feb-2019 7:33 pm
செப்புவதைக் கேட்கும்படி செப்படி வித்தைசெய்வார் எப்படியும் வலைவிரிப்பர், முப்போதும் முழித்தேநட! -----விழித்து நடக்க அழகிய அறிவுரைகள் 21-Feb-2019 6:30 pm
பசுபதி - பசுபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2019 3:08 pm

உணர்வுகளை உண்ணும் ...

சுயநல சுகம் காண
சூழ்நிலை
தன்வசப்படுத்தும்
பொல்லாத மிருகங்கள்
மனித உருவில்

உணர்வறியா சின்னஞ்சிறு
சிறுமிகளை
சிதைக்கும் சீர்கெட்ட ஜென்மங்கள்

கல்வி சாலைகளில்
களவி தேடுது
காதல் போர்வையில்
காமம் தேடுது
கள்ளக்காதலில் துரோகம்
முளைக்குது
உறவுகளில் உண்மை எங்கே ?

பாலுணர்வு மேலெழும்புது
பாசம் நேசம் எல்லாம்
புதைக்கப்பட்டு

ஆசை ஒன்றே குறிகோளாய்
தசை தேடும்
கள்ளர்கள் இருக்க

எங்கே நம்பிக்கை
விதைப்பது
ஆங்காங்கே முளைத்திருப்பது
முட்களே

காயப்படுத்தாமல் இருக்க
நம் பாதைகளில்
பார்த்துதான் தடம் பதிக்க வேண்டுமன்றோ

மனம் அது திருந்தாவிட்டால்
தண்டணை

மேலும்

தங்களின் கருத்துக்கு நன்றி தோழரே 20-Feb-2019 9:14 pm
நடப்பைக் கண்டு வெகுண்டு உள்ளீர் அருமையான பதிவு. 19-Feb-2019 10:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
மேலே