Maxin - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Maxin |
இடம் | : |
பிறந்த தேதி | : 15-Nov-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 10 |
நாளை பார்ப்பதற்காக இன்றை சிறையில் வைத்திருந்தேன்
நாளை வந்து இன்றை பார்த்தது
இன்று சிரித்துக்கொண்டே நாளையை பார்த்து விட்டு இறந்து போனது
நாளை இன்று மரணித்ததை கண்டு விட்டு சிறைக்குச்சென்றது
சூரியன் கோடை விடுமுறைக்கு சென்ற காலம்
சந்திரனும் மேகப்போர்வை போர்திக்கொண்ட குளிர் இரவு.
இந்த குளிரில் மொட்டை மாடி காதல் தேவைதானா என்று எங்களை திட்டிக்கொண்டே தன் கூட்டில் மறைந்தது அந்த காகம்.
அந்த இரவு முழுவதும் போர்திக்கொண்டு
முகத்தோடு முகம் சாய்த்தபடி
கம்பளிக்குள் உறைந்து கொண்டோம் இருவரும்.
கண்களும் மூக்கும் மட்டும் தான் இருளை தீண்டுகின்றன மற்றவை குல்லாவிற்குள்
குளிரும் வெப்பமுமாய் கதகதப்பு காதல் செய்தன.
ஆங்காங்கே சில நட்சத்திரங்கள்
நம்மை பார்ப்பதற்காக மேகத்திரையை
விலக்கி நம்மை எட்டி எட்டிப் பார்த்தது.
அந்த நட்சத்திரங்களை நாம் பார்த்ததும்
அவை மறைந்து ஒளிந்து கொண்டன
அதை
மனிதன் ஆடை அணியும் பொழுதே மானத்தை உடுத்திக்கொள்கிறான்
ஆடை தொலைந்தால் புதிய ஆடையை அணிகிறான்
மானம் தொலைந்தால் புதிய உடலை அணிகிறான்
இதில் இரண்டு மரணங்கள் நிகழ்கின்றன
இதில் இரண்டாவது மரணம் மனிதன் உருவாக்கிய முட்டாள் தனம்
என் மரணத்தின் போது
என் காதலிக்கு மட்டுமே
என் அருகில் இடமுண்டு
என் கடைசி கண் சிமிட்டலை
அவள் உதடுகளே முடித்து வைக்க வேண்டும்
என் கடைசி முத்ததின் மணித்துளிகள்
இடைவேளை இன்றியும், அதில் என்
கடைசி சுவாசம் நின்றவுடன்
ஒரு முறை அவள் அவள் மூச்சில்
சுவாசிகத்து இறக்க வேண்டும்
என் கல்லறையில் என்னை அவள்
மட்டுமே அடக்கம் செய்ய வேண்டும்.
ஏதோ நிலையான வாழ்வு என்கிறார்களே
அதை அவள் மனதிலேயே நிலைத்து வாழ வேண்டும்
காதல் மட்டுமே வாழ்வின் நிறைவு என
பலர் நினைக்கும் வரை வாழ்ந்து
இறக்க வேண்டும்
என் மரணத்தின் போது
என் காதலிக்கு மட்டுமே
என் அருகில் இடமுண்டு
என் கடைசி கண் சிமிட்டலை
அவள் உதடுகளே முடித்து வைக்க வேண்டும்
என் கடைசி முத்ததின் மணித்துளிகள்
இடைவேளை இன்றியும், அதில் என்
கடைசி சுவாசம் நின்றவுடன்
ஒரு முறை அவள் அவள் மூச்சில்
சுவாசிகத்து இறக்க வேண்டும்
என் கல்லறையில் என்னை அவள்
மட்டுமே அடக்கம் செய்ய வேண்டும்.
ஏதோ நிலையான வாழ்வு என்கிறார்களே
அதை அவள் மனதிலேயே நிலைத்து வாழ வேண்டும்
காதல் மட்டுமே வாழ்வின் நிறைவு என
பலர் நினைக்கும் வரை வாழ்ந்து
இறக்க வேண்டும்