வருண் மகிழன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வருண் மகிழன்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  05-Jun-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Aug-2018
பார்த்தவர்கள்:  2744
புள்ளி:  266

என் படைப்புகள்
வருண் மகிழன் செய்திகள்
வருண் மகிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2019 5:13 pm

என்னை மயானத்தில்
மாடு மேய்க்க விட்டுவிட்டு
குடமுழுக்கு தீர்த்தத்தில்
குளிக்கிறது உன் கூந்தல்
என் நிழலும் போதையில் தள்ளாட
உன் உலகம் புது உறவில் கொண்டாடுது
தென்றல் ரசித்த என் ஜன்னல்
புயலில் சிக்கி புலம்புகிறது
பூமியின் சுழற்சியே அறியாமல்
உன் பூவிழியில் தொலைந்த என் நாட்கள்
என் இதயக் குடுவையின் முழுப்பரப்பிலும்
உன் நினைவுக்கு கூடுகள் மூச்சடைக்குது
கட்டுப்பாடின்றி உன்மேல் வைத்த அன்பு
இன்று என் கட்டளைகளை காலால் உதைக்கிறது
நடைப்பிணமாக நான் நடக்க
அலங்காரங்களுடன் அங்கு ஆரவாரம் ஆர்ப்பறிக்குது
பிணமாகும் வரை இனி புலம்பல் தான் என் தாய் மொழியோ ?

மேலும்

வருண் மகிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2019 5:04 pm

செம்புழுதியில
உருண்டு பிரண்டு
சொம்புத்தண்ணியே
சோறா உண்டு
உச்சி வெயிலில
உஷ்ண உடம்பா
காலனியனியா காளையாய்
காளையோடு
மண்ணோடு மண்ணாக
போகும் மட்டும்
வித விதைச்சு
அறுவடை செஞ்சு
நெஞ்சுத்தண்ணி முட்டி
நடையா நட நடந்து
அறுத்த கூலிக்கே
தாலியருக்குற நேரத்திலும்
எல்லோருக்கும்
நல்ல சோறு போட்ட
நம்ம விவசாயி மக்க
ரேஷன் கடையிலே
புழுவிழுந்த புழுங்கல் அரிசி வாங்க
அடையாள அட்டை எடுத்து வந்து
அடையாளம் தெரியாம போகுறான் ...

மேலும்

வருண் மகிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2019 5:08 pm

அதிகாரம் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்க
அடக்குமுறையின் கைகள் ஓங்கி அடிக்க
பணபலம் பாதாளம் வரை பாய
உழைப்பவனின் கால்கள்
ஊனமுற்றுதான் கிடக்கும்
பாடையில் போகும் போதும்
மாற்று ஆடைக்கும் வழியில்லாமல் ...

மேலும்

வருண் மகிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2019 4:05 pm

யாருக்கும்
உபயோகம் இல்லாததாலோ
இல்லை
தேவை முடிந்த பின்
தூக்கியெறியப்பட்டதாலோ
வேண்டாப்பொருளாய்
"குப்பை " என்னும்
பொது மொழியோடு
தெருவெங்கும்
சாக்கடையெங்கும்
கேட்பாரற்று
கிழிந்து
நைந்து
கிடக்கும்
எங்களை தீயிலிட்டு
மீண்டும் எரித்து
காற்றோடு கலக்கையில்
மூக்கை மூடிக்கொள்ளும்
மூடர்கூடம்
உங்களுக்கு
எப்படி தெரியும்
எங்களின் வலிகள் ......

மேலும்

வருண் மகிழன் - வருண் மகிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-May-2019 7:13 pm

பதிவுகள் எல்லாம்
நிஜங்களில்லை ..
நிஜங்கள் எல்லாமே
பதிவுகளாவதில்லை ..

சில வக்கிரர்களின்
வஞ்சனை வாசம்
சில கோபக்காரர்களின்
கோர முகச்சாயம்
சில சூழ்நிலைக்காரர்களின்
சூட்சம சூழ்நிலையியல்
சில ஏமாற்றுக்காரர்களின்
ஏகாதிபத்திய சித்தாந்தம்

இப்படியேனும்
பலதரப்பட்ட
குளறுபடிகள்
குப்பைத்தொட்டியாகவே
பல வரலாறுகள்
வலுவிழந்து
வசைபாடப்படுவதற்கு
வாக்காக அமைந்தது விட்டது ...
எதிர்கால தலைமுறையில்
வரலாறுகள் மாற்றியெழுதப்படாது
மாறாக
மாற்றி எழுதப்பட்டவைகளெல்லாம்
வரலாறாக ஓங்கி நிற்கும் ....

மேலும்

நன்றி தோழி 31-May-2019 2:59 pm
அருமை 31-May-2019 1:57 pm
வருண் மகிழன் - வருண் மகிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-May-2019 3:24 pm

தொட்டியில்
இருந்த மீன்
நெகிழிப்பையில்
அடைபட்டிருந்த
மீனைப்பார்த்து
பரிதாபப்பட்டது ..
கடல் மீன்கள்
இதன் நினைவில்
வரவில்லையோ ஏனோ?

மேலும்

நன்றி நட்பே 30-May-2019 2:46 pm
அருமை 30-May-2019 1:04 am
வருண் மகிழன் - வருண் மகிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2019 3:55 pm

வண்ண வண்ணப் பூச்சுகள்
கண்ணாடியிலான மாளிகை
மிரளவைக்கும் கட்டிடம்
ஆச்சரியப்படுத்தும் அலங்காரம்
எல்லாம் புத்தம்புதிதாய்
"இங்கு நன்கொடைகள் வழங்கப்படாது "
என்ற பதாகையைத்தவிர....

மேலும்

நன்றி 27-Apr-2019 3:16 pm
arumai 27-Apr-2019 2:13 pm
வருண் மகிழன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Apr-2019 4:00 pm

"லஞ்சம் வாங்குவதும் குற்றம்
லஞ்சம் கொடுப்பதும் குற்றம் "
என்ற அறிவிப்புப்பலகையின் கீழே
அன்பளிப்பு
"நா.ராமசாமி " என்றிருந்தது!

மேலும்

பலகை அன்பளித்தவர் பின் பல கை எதிர்பார்ப்பார் ... 01-May-2019 8:02 pm
பலகையே அன்பளித்தவர் தானே..தவறில்லை. 30-Apr-2019 10:59 pm
நன்றி நட்பே 27-Apr-2019 3:16 pm
nandru 27-Apr-2019 2:15 pm
வருண் மகிழன் - வருண் மகிழன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2019 3:11 pm

பக்கத்து வரப்பின்
தக்காளிச் செடி
எல்லை மீறி
என் வரப்பில்
தலை காட்டுகிறது ...
அதை மகிழ்வுடனே
நான் அனுமதிக்கிறேன் ..
"விவசாயி "

மேலும்

எண்ணம் போல் வாழ்க்கை ... நன்றி 04-Apr-2019 12:16 pm
அருமையான எண்ணம் .. 03-Apr-2019 4:08 pm
நன்றி நண்பரே 27-Mar-2019 3:35 pm
அருமை, அருமை, மகிழ்ச்சி 27-Mar-2019 3:30 pm
வருண் மகிழன் - வருண் மகிழன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2018 8:13 pm

கடை விழிப் பார்வையில்
கவிதை சொன்னால் ..
கண்களை சிமிட்டி
கர்வம் தொலைத்த்தால்..

புன்னகைப் பூவால்
புது மலர் மலர..
தேனிசை குரலில்
செந்தமிழ் திளைக்க..
பேசிய வார்த்தையில்
வான்வெளி துளிர்த்தது...

மெல்லிய இடையின் இலக்கணமே
உன் அழகினில் தொலைந்தேன் இக்கணமே..

உன் பாதச்சுவடுகள் வழியாக
புது பாதையும் தொடருது துணையாக...
உந்தன் பின்னே வந்தாலே
எந்தன் ஜென்மம் முடியாதே...

கைகளை கட்டி கடலினுள் தள்ளியும்
வானத்தை தொடுகிறான் உன்னாலே..

உன்னை அடையும் ஆண்மகனும்
கர்ப்பம் தரித்துத் தாயாவான்..

உந்தன் அருகில் இருந்தாலே
எதுவும் சாத்தியம் தன்னாலே..

மேலும்

வருண் மகிழன் - வருண் மகிழன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2018 3:41 pm

கொஞ்சம் கூச்ச சுபாவம் தான் எனக்கும்...
இன்றோ அது எல்லை மீறி
என்னுள்ளே என்னவென்றறியா
எல்லைகளுக்குள் எட்டிப்பார்க்கிறது!

காதல் திருமணம் தான்..
பலமுறை பார்த்து..
பலவற்றை பேசி..
பல நினைவுகளில் நினைந்து..
பல பொழுதுகள் கழித்து..
காதல் மொழி பல பேசி
கை கோர்த்த தருணங்களும்
ஏராளம்!
தாராளம்!

இன்று ஏனோ?!
உன் கண்களை காண
கார்கில் போரே நடக்கிறது ...
உன்னருகில் நிற்க
அம்மணம் துறந்ததாய் ஓர் உணர்வு ..

பல நாட்களின் ஏக்கம்..
பல நாள் கனவுகளின் கருப்பொருள் ..
பல கவிதைகளின் கற்பனை..
எத்தனை முறை ஒத்திகை
அத்தனையும் இன்று கண்முன்னே ..!

குறித்த நேரத்தில் நீ வரவில்லை என்று
கோ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

இவர் பின்தொடர்பவர்கள் (43)

தேவிராஜ்கமல்

தேவிராஜ்கமல்

மலேசியா
மேகலை

மேகலை

ஸ்ரீவில்லிபுத்தூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (41)

மேலே