காதம்பரி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : காதம்பரி |
இடம் | : மும்பை |
பிறந்த தேதி | : 07-Sep-1982 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 1455 |
புள்ளி | : 39 |
வரவேற்புகள்..
எனது கவிதைகளும், கதைகளும் இந்தப் பக்கத்தில் ...
https://m.facebook.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF-391123455004269/?view_public_for=391123455004269
பூக்கள் பாடும் வசந்த கீதத்தில்
வண்ணங்கள்
ராக மாலிகை !
புன்னகை பாடும் மௌன கீதத்தில்
முத்துக்கள்
ராக மாலிகை !
கண்கள் பாடும் காதல் பாடலில்
கயல்கள்
நீந்தும் ஓவியம் !
பதிவுகள் எல்லாம்
நிஜங்களில்லை ..
நிஜங்கள் எல்லாமே
பதிவுகளாவதில்லை ..
சில வக்கிரர்களின்
வஞ்சனை வாசம்
சில கோபக்காரர்களின்
கோர முகச்சாயம்
சில சூழ்நிலைக்காரர்களின்
சூட்சம சூழ்நிலையியல்
சில ஏமாற்றுக்காரர்களின்
ஏகாதிபத்திய சித்தாந்தம்
இப்படியேனும்
பலதரப்பட்ட
குளறுபடிகள்
குப்பைத்தொட்டியாகவே
பல வரலாறுகள்
வலுவிழந்து
வசைபாடப்படுவதற்கு
வாக்காக அமைந்தது விட்டது ...
எதிர்கால தலைமுறையில்
வரலாறுகள் மாற்றியெழுதப்படாது
மாறாக
மாற்றி எழுதப்பட்டவைகளெல்லாம்
வரலாறாக ஓங்கி நிற்கும் ....
அகமதி அற்றவள்...
ஆய்கம் கொண்டவள்...
இந்திரவில் நிறமிவள்...
ஈடணம் அழிவில்லாதவள்...
உவமித்தல் வேண்டாதவள்...
ஊதியொடுக்கம் ஆகின்றவள்...
எக்கழுத்தம் கொள்ளாதவள்..
ஏழ்கடலில் தேன்கடல் இவள்...
ஐவிரலில் தவழ்பவள்...
ஒயிலாய் நடையடையவள்...
ஓமுடிவு இல்லாதவள்...
ஔவை மொழியானவள்..
அஃதே தமிழானவள்...
இவளைக் கொண்டாடும் உலகுக்கு..
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
சுகமாய் முதுகில்
சுமைகளைச் சுமப்பவன்...
மறுப்புகள் இன்றி
பொறுப்புகள் ஏற்பவன்...
கைப்பொருள் தன்னை
காவற் காக்க மறந்தவன்...
தாபங்கள் மறைத்து
ஏக்கங்கள் கொண்டவன்...
கடமைக் கவசம் அணிந்து
உரிமைப் போரில் தோற்பவன்...
தகப்பனின் கண்டிப்பையும்
தாயின் கனிவையும் - ஒருங்கே
தரும் அவனே
தலைச்சன்பிள்ளை....
சமீப நாட்களாய்…
ஓய்விலுள்ள நீரின் மேல் எறிந்த கல்லாய்
அவனின் அருகாமை தந்த
சலனங்கள் அவளுள்...
பேசிக்கொண்டிருக்கும்போதே
அழகாய் - - என்
முன்நெற்றி விழும் முடி ஒதுக்கும்
அவன் ஒற்றை விரல் தொடுகை
தன்செயலா.. தற்செயலா
ஆனால்
தத்தளித்தது என் மனம்...
ஒற்றை வார்த்தைப் பதிலின்
கேள்விக்கு
ஓராயிரம் முறை
திணறுகிறேன்..
கேட்பவன் அவனெனில்…
புடவை தந்த அழகில் - அனைவரின் பாராட்டை ஏற்ற விழிகள்…
அவன் விழிப்பார்வை தாளாமல்
கன்னக் குழிகளும் சிவப்பேரின...
யுகமாய் தோன்றும் அவனது
ஒரு நாள் விடுப்பு…
மௌன மொழிகளும் வாசிக்கும் மனது…
இன்னபிற
இன்னபிற…
என்னுள் காதலின் அறிகுறிகளா
அத்தமக குட்டி...
கட்டழகு சுட்டி..
காதலுக்கு கெட்டி..
மாமா நீயும் புதுசா...
தூக்காதய்யா கூசா..
காதலென்ன லேசா...
அந்தி சாயும் நேரம்...
ஆத்தங்கர ஓரம்...
காத்திருக்கேன்டி தாரம்...
ஆத்தங்கர குளிரு...
தாங்காதிந்த தளிரு...
வேணாம் மாமா போயிரு...
மத்தியான வெயிலு...
மாந்தோப்பு நிழலு...
காத்திருக்கேன்டி மயிலு...
மாந்தோப்பு எறும்பு...
வெறுக்குமிந்த கரும்பு..
வேணாம் மாமா குறும்பு...
வாசமுள்ள மல்லி...
மாமன் பேரச்சொல்லி...
வாங்கித்தரேன் அல்லி...
வச்சுக்கிட்டா நானும்...
வாக்கப்பட தோனும்...
வேணாம் மாமா நீனும்..
ஏன்டி இந்த வீம்பு...
எதுக்கு எனக்க