ஏட்டிக்கு போட்டி

அத்தமக குட்டி...
கட்டழகு சுட்டி..
காதலுக்கு கெட்டி..

மாமா நீயும் புதுசா...
தூக்காதய்யா கூசா..
காதலென்ன லேசா...

அந்தி சாயும் நேரம்...
ஆத்தங்கர ஓரம்...
காத்திருக்கேன்டி தாரம்...

ஆத்தங்கர குளிரு...
தாங்காதிந்த தளிரு...
வேணாம் மாமா போயிரு...

மத்தியான வெயிலு...
மாந்தோப்பு நிழலு...
காத்திருக்கேன்டி மயிலு...

மாந்தோப்பு எறும்பு...
வெறுக்குமிந்த கரும்பு..
வேணாம் மாமா குறும்பு...

வாசமுள்ள மல்லி...
மாமன் பேரச்சொல்லி...
வாங்கித்தரேன் அல்லி...

வச்சுக்கிட்டா நானும்...
வாக்கப்பட தோனும்...
வேணாம் மாமா நீனும்..

ஏன்டி இந்த வீம்பு...
எதுக்கு எனக்கு வம்பு...
வேணாம் உன் அன்பு...

அய்யோ மாமா நில்லு...
நீயும் இல்லாமல்லு...
நானும் வெறும் கல்லு...

எழுதியவர் : காதம்பரி (12-Feb-19, 5:26 pm)
சேர்த்தது : காதம்பரி
பார்வை : 101

மேலே