நேசம்

நேசம்...
11/09/2025

காக்கை குருவி
எங்கள் ஜாதி
சகமனித நேயமே
உயர் நீதி

இசைக்கு இசையும்
எந்த உயிரினமும்
இசைக்கு மொழியில்லை
அது தெய்வீகம்

ரத்தபந்த பாசம்
மனித இயல்பே
சொந்தமில்லா நேசம்
இறையின் நகலே

எல்லார்க்கும் எல்லா ம்
பகிர்தலில் இன்பமே
பகிர்தலின் ஆணிவேர்
உள்ளிருக்கும் நேசமே..!

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (13-Sep-25, 7:05 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : nesam
பார்வை : 36

மேலே