Piranha - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Piranha |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 04-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 427 |
புள்ளி | : 38 |
வானத்தில் தோன்றும் நிலவழகு
வண்ணத்துப் பூச்சிக்கு நிறமழகு
கதிரொளி மேல்படும் மழைத்துளியால்
உதித்திடும் வானவில் வடிவழகு
வெள்ளிக் கிழமைக்கு விளக்கழகு
வெண்ணிற முயலுக்குக் கண்ணழகு
துள்ளித் திரிந்திடும் மான்களுக்கு
புள்ளிகள் தந்திடும் புதுஆழகு
மல்லிகை மலருக்கு மணமழகு
அல்லிகள் பூத்திடும் குளமழகு
மாலையில் மறையும் கதிரவனும்
காலையில் உதிப்பது நிதமழகு
பால்தரும் பசுவிற்கு கன்றழகு
பறக்கும் பருந்துக்கு சிறகழகு
அங்கும் இங்கும் அலைகின்ற
அணிலுக்கு முதுகில் கோடழகு
கண்ணன் கைகளில் குழலழகு
காண்டீபன் கைகளில் வில்லழக
அக்காவின் கன்னத்தில்
பவுடர் தெரிந்தது....
புழுதியேறிய என்
கால்கள் வெள்ளையாகத் தெரிந்தது...
பெரியம்மாவிற்கு
முன்னத்துப்பல் எடுப்பாகத்
தெரிந்தது....
அத்தை மகள் எனக்குப்
பக்கத்தில்
முறைத்துக் கொண்டிருந்தாள்...
இடது புறமாகச்
சிலுப்பிவிட்டு வழித்துச்
சீவியிருந்தான் மச்சான்....
பெரிய பெல் பாட்டம்
வைத்து மியாமி குஷனோடு
நின்ற மாமா....
தூக்கியிருந்த குழந்தை
யாரெனத் தெரியவில்லை....
வலது கையில் கடிகாரம்
போட்டிருந்தார் அப்பா...
அத்தனை அவசரங்களிலும்
யாரையோ வரவேற்றுக் கொண்டிருந்தாள்...அம்மா..
எல்லோரும் ப்ளாஷ்க்கு
வெறித்திருந்தோம்..
எடுக்கப்பட்ட நாளன்றின்
பக்கத்து வீட்டில் தீ!
பார்வையாளன் டி-ஷர்ட்டில்
சே-குவேரா..!
--
கற்பு பொதுவாகியிருந்தால்
தேவையிருந்திருக்காது
கண்ணகி சிலை.!
--
துகிலுரித்தேன்.
நிர்வாணமானது
சாளரம்.
--
சாதீயம்
செய்கிறது பொதுவுடைமை(க்)
கொலைகள் !
--
தீ சுட்டது.
உயரோசையில் தாய்
தோலிசைக்கருவி.!
-
தலைக்கணம்
பாரம் தாங்குகிறது
தலையணை..!
--
அய்யகோ! நிற்காதோ?
இரயில் தண்டவாளத்தில் ஒடுகிறது
தலித்துகளின் செங்குருதி..!
--
அரசியல் நாக்குகள்!
தேர்தல் நேரத்தில் நக்குகிறது-
ஈழத்தின் கண்ணீரை.!
--
விஞ்ஞானபூர்வமானக் கொலை.
இனி ஒவியங்களில் மட்டும்
குருவிகள்..?
--
இப்போதே அழைக
சொல்ல சொல்ல வந்து வந்து
மெல்ல வைக்கும் காதல்
உள்ளுக்குள்ளே சொல்லை வைத்து
சொல்ல வைக்கும் காதல்
சொல்லும் பொது வார்தைஇன்றி
கொள்ள வைக்கும் காதல்
காதலே
என்ன என்ன மாயம் என்ன
என்னிடத்தில் செய்தாய்
சின்ன சின்ன புன்னகையில்
செய்தி என்ன சொன்னை
வண்ண வண்ண பார்வையாலே
நெஞ்சை கொண்டு போனாய்
கதாலி
ஓஹ காதலியே என்னை ஏதோ செய்கிறாய்
உயிர் எங்கிலும் பூபூவை நெய்கிறாய்
காதல் காதல் சுகம் தரும் வலி
வலியில் அறிந்தேன் நே வரும் வழி
தொட்டு தொட (...)
"அலை பாயுதே கண்ணா " என்ற புகழ் பெற்ற பாட்டு கிருஷ்ண பிரேமை அருமையாக வெளிப்படும்.அந்த பாடலை ஏழுதியது யார் ?
காதலர் தின வாழ்த்துக்கள் . .
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் . .
எட்டையபுரத்து கவிஞன்
அவன்!
யாரும் எட்டாத கவிஞன்
அவன்!
தமிழை நாவில்
சுமந்த அக்காலத்திலே
இதயத்தில் சுமந்து சுவாசித்தவன்!
தமிழை எண்ணெய் எனவும்
வார்தைகளை திரி எனவும்
மறு உருவம் தரித்து
கவிதைகளாக பெற்றெடுத்து
உலகிற்கு தத்துக்கொடுத்து
தீச்சுடரென ஓளிரவிட்டான்!
தேனை மட்டுமே
உண்ணுமாம் தேனீ
அவன்
தமிழை மட்டுமே
உண்ணும் ஞானி!
வெள்ளைத்தோல்களை உரிக்க
தன் அணு அளவு சிந்தனைகளையும்
உரித்தெடுத்தான் கவிதைகளாக!
ஆயுதம் ஏந்திய போராட்டங்கள்
அவன்!
கவிதைகளில்
அவன்!
தேன் சிந்தும் வரிகளை
கண்டபோதெல்லாம்
வான் சிந்தியிருக்கக்கூடும்
மழையை!
அவன்!
கவிதைகள் நெருப்
நான் எங்கு சென்றாலும் என்னை தொடர்கிறாள்,
நிழலாக அல்ல நினைவாக . .
தமிழன் என்பதில் பெருமைஎன்றால்...
மொழியால் பிரிவினை வருமன்றோ...
இனமும் குலமும் தவறென்றால்...
மொழியின் பிரிவினை முறைதானோ???
கருப்பனும் சிவப்பனும் பிறந்தாலும்...
இறப்பினில் மாற்றங்கள் கண்டதுண்டோ???
இந்நியதியை ஏற்றவன் மேல்ஜாதியாவான்...
இதை ஏற்க்க மறுப்பவனே கீழ்ஜாதியாவான்...
மானிடன் தானே நாமெல்லாம்...
மொழியும் இனமும் பிரிவன்றோ???
தமிழன் என்ற சொல்தவிர்த்து
நான்-மனிதன் என்று உரைத்திடுவோம்...! :)
செம்மொழியாம் தமிழ்மொழியும் அகற்றிடட்டும்...
எம்மொழியான் எம்நாட்டன்எனும் வேற்றுமையை...
செம்மொழியாம் தமிழ்மொழியும் மறந்திடட்டும்...
தீண்டாமை எனும் பெரு