நடமாடும் நதிகள்- 6 –சந்தோஷ்

பக்கத்து வீட்டில் தீ!
பார்வையாளன் டி-ஷர்ட்டில்
சே-குவேரா..!

--

கற்பு பொதுவாகியிருந்தால்
தேவையிருந்திருக்காது
கண்ணகி சிலை.!

--

துகிலுரித்தேன்.
நிர்வாணமானது
சாளரம்.

--

சாதீயம்
செய்கிறது பொதுவுடைமை(க்)
கொலைகள் !

--

தீ சுட்டது.
உயரோசையில் தாய்
தோலிசைக்கருவி.!

-

தலைக்கணம்
பாரம் தாங்குகிறது
தலையணை..!

--

அய்யகோ! நிற்காதோ?
இரயில் தண்டவாளத்தில் ஒடுகிறது
தலித்துகளின் செங்குருதி..!

--

அரசியல் நாக்குகள்!
தேர்தல் நேரத்தில் நக்குகிறது-
ஈழத்தின் கண்ணீரை.!

--

விஞ்ஞானபூர்வமானக் கொலை.
இனி ஒவியங்களில் மட்டும்
குருவிகள்..?

--

இப்போதே அழைக்கிறேன்
உபசரிக்கமாட்டேன் அப்போது
நான் சடலம்.!
--



-இரா.சந்தோஷ் குமார்.



குறிப்பு : வெளிப்படையான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறேன்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (11-Feb-16, 1:40 am)
பார்வை : 648

மேலே