மனித குலம்
தமிழன் என்பதில் பெருமைஎன்றால்...
மொழியால் பிரிவினை வருமன்றோ...
இனமும் குலமும் தவறென்றால்...
மொழியின் பிரிவினை முறைதானோ???
கருப்பனும் சிவப்பனும் பிறந்தாலும்...
இறப்பினில் மாற்றங்கள் கண்டதுண்டோ???
இந்நியதியை ஏற்றவன் மேல்ஜாதியாவான்...
இதை ஏற்க்க மறுப்பவனே கீழ்ஜாதியாவான்...
மானிடன் தானே நாமெல்லாம்...
மொழியும் இனமும் பிரிவன்றோ???
தமிழன் என்ற சொல்தவிர்த்து
நான்-மனிதன் என்று உரைத்திடுவோம்...! :)
செம்மொழியாம் தமிழ்மொழியும் அகற்றிடட்டும்...
எம்மொழியான் எம்நாட்டன்எனும் வேற்றுமையை...
செம்மொழியாம் தமிழ்மொழியும் மறந்திடட்டும்...
தீண்டாமை எனும் பெரும்கடும் சொல்லை....