இதெல்லாம் நகைச்சுவையா
ஒரு வயதான மனிதர் தடுமாறிய வண்ணம் நடந்து சென்றுகொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் கையில் ஒரு கைத்தடி இருந்தது. பின், அவர் ஏன் தடுமாறிய வண்ணம் நடந்து செல்கிறார்?
டாஸ்மாக்கில் அவரது தாகத்தை கொஞ்சம் போக்கிக்கொண்டு வந்தார்.
&&&
ஒரு பெண் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு நாயைப்பார்த்துவிட்டு வீல் வீல் என்று சத்தமிட்டாள். ஏன்? அவளுடன் சென்றுகொண்டிருந்த அவளது நாயின் பெயர் வீல்.
&&&
புதிதாக பட்டினத்திற்கு வந்த ஒரு கிராமவாசி காய்கறி வியாபாரம் செய்கிறார். ஒரு மாத்திற்கு பின்பு கணக்கு பார்க்கும்போதுதான் தெரிகிறது, அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று. எப்படி?
அவரிடம் காய்கறி வாங்க வந்த அனைவரிடமும் அவர் " ஐயா, நீங்களே காய்களை பொறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டிற்குச் சென்று சமைக்கையில் காய் சரியில்லை அல்லது சொத்தை என்றால், மீண்டும் என்னிடம் கொண்டுவாருங்கள். அதற்கு பதில் வேறு காய்களை பொறுக்கி எடுத்துச் செல்லுங்கள்"
&&&
ஒரு நடிகையிடம் பலர் சென்று, அவளை அணைத்து முத்தம் கொடுத்தனர். ஆனால், நடிகை எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்? ஏன்?
அது நடிகையின் உண்மையான தோற்றம் போல் தெரிந்த மெழுகுச்சிலை.
&&&
புதிதாகக் கார் ஒட்டகற்றுக்கொண்ட ஒருவர், புதிய கார் ஒன்று வாங்காமல் பழைய காரையே ஓட்டுகிறார். ஏன்?
அவர் ஓட்டுவது அவரது மனைவியின் சொந்த பழைய கார்.
&&&
அலுவலகத்தில் அதிகாரி குமாஸ்தாவிடம் கேட்கிறார் " நேற்று முக்கியமான வேலை என்று உங்களை வரச்சொல்லியிருந்தேன், ஏன் நீங்கள் அலுவலகத்திற்கு வரவில்லை?
குமாஸ்தா "சார், நேற்று ஞாயிறு சார்"
அதிகாரி " ஞாயிறு அன்று ஞாயிறு (சூரியன்) உதிக்காமலா இருக்கிறது?"
குமாஸ்தா " சார், என் வீட்டில் இருப்பது ஞாயிறு இல்லை சார். சனி"