Ramasubramanian - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Ramasubramanian |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 17-Apr-1959 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 1536 |
புள்ளி | : 610 |
நான் ஒரு குழந்தை, உணவை ருசித்து சாப்பிடுவதில்
நான் ஒரு மாணவன், வாழ்கை எனும் புதிரான பள்ளியில்
நான் ஒரு கலைஞன், என் கற்பனையை படைப்பதில்
நான் ஒரு பாடகன், எனக்கு விருப்பமான பாடல்களை பாடுவதில்
நான் ஒரு ரசிகன், நகைச்சுவையை, மனித இயல்புகளை சொல்லி, கேட்டு பார்ப்பதில்
நான் ஒரு மனிதன், பாசம், பண்பு, கருணை கொண்டவன் என்பதால்
அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் நடக்கும் சில அதிர்ச்சி தரம் மாற்றங்கள் இங்கு சித்தரிக்கப்படுகின்றன:
ஏற்றுமதியாளர்: போன மாதம் நான் ஆயிரம் ரூபாய்க்கு அமெரிக்காவிற்கு ஏற்றுக்கதி என்று சொன்ன பொருள் விலை இப்போது என்ன?
ஏற்றுமதி வாங்கி: ஒன்றும் அதிகம் இல்லை, இரண்டாயிரம் ரூபாய் தான்.
ஏற்றுமதியாளர்: அமெரிக்க நம் நாட்டுப்பொருட்கள் மீது கூடுதலாக 34% இறக்குமதி கட்டணத்தை கூட்டிவிட்டதால் எங்க பாடு பெரும்பாடாகிவிட்டது. இனிமேல் எப்படி பொருட்களை அமெரிக்க ஏற்றுமதி செய்யமுடியும்னு தெரியவில்லை.
&&&
அமெரிக்கா விமானநிலையத்தில்: நீங்கள் எங்கள் நாட்டிற்கு கொண்டுவந்த பொருட்களுக்கு 100% கூடுதல் கட்டணம் செலுத்தவ
கிறிஸ்து பிறப்பதற்கு முன்புள்ள காலத்தை கிமு என்று சொல்கிறோம். கிறிஸ்து பிறந்தபின் உள்ள காலத்தை கிபி என்று சொல்கிறோம். அப்படி என்றால் கிறிஸ்து இறந்தபின் நடக்கும் காலத்தை கிஇபி (கிறிஸ்து இறந்தபின்) என்றுதானே அழைக்கவேண்டும்.
இலங்கை என்று பேர் இருந்தபோது அதன் தலைநகர் கொழும்பு. அதன் பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்றியபின் அதன் தலைநகர் பெயர் கொழுப்பு என்றுதானே இருக்கவேண்டும்?
வாகனங்களை அதிவேகமாக ஓட்டினால் அபராதம் கட்டவேண்டும். வாகனங்களை மெதுவாக ஓட்டினால், மெதுவாக ஒட்டுகிறவர்களுக்கு சலுகை ஏதாவது கிடைக்கவேண்டும் அல்லவா?
வார நாட்கள்ல வெளியே போனா, அப்படி ஒரு டிராபிக். சரி சனி கிழமை வெளியே போவோம்னா, ம
கோவையில் மழை பெய்தால்
புதுவையில் வெயில் அடிக்கும்
&&&
மதுரைக்கு மல்லி என்றால்
குதிரைக்கு கிண்டி
&&&
சேனைக்கு வீரன்
பானைக்கு சோறு
&&&
பூனைக்கு பாலுன்னா
யானைக்கு கரும்பு
&&&
திருச்சின்னா ரங்கநாதர்
திருதிருன்னா உங்க பாதர்
&&&
மௌலானாவுக்கு குல்லா
கல்கத்தாவுக்கு ரசகுல்லா
&&&
இட்லிக்கு சட்டினி
ஏகாதசிக்கு பட்டினி
&&&
உனக்கு வேலை கொஞ்சம் அதிகம்னா
எனக்கு திமிர் ரொம்பவே அதிகம்
மலர்வண்ணன்: மதிவாணா, இன்னிக்கு தேதி என்ன தெரியுமா?
மதிவாணன்: அது தெரிஞ்சி என்ன ஆகப்போகுது? தினமும் நடக்கறதுதான் நடக்குது.
மலர்வண்ணன்: ஏம்ப்பா இப்படி பேசறே? இன்னிக்கு உன்னோட திருமண நாள். இது ஞாபகம் இல்லையா உனக்கு?
மதிவாணன்: ஏம்பா சும்மா இருந்தவனை பயம் காட்டுறே?
மலர்வண்ணன்: உன் திருமண நாள் உனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளுன்னு நீதானே அடிக்கடி சொல்லுவே.
மதிவாணன்: அதெல்லாம் அந்தக்காலம். இப்போ நெனச்சுப்பாத்தா, ஏண்டா திருமணம் செஞ்சிண்டேன்னு தோணுது.
மலர்வண்ணன்: ஏம்ப்பா, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உன்னுடைய திருமண நாள் அன்று உன்னை பார்த்தபோது, நீ எவ்வளவு சந்தோஷமாக இருந்தே தெரியுமா? இன்னிக்கி என்ன
பசும்புல்லை மட்டும் மேய்ந்துவிட்டு பாலுடன் உடலையும் தந்திடும் ஆடு
அதன் பால் மட்டுமின்றி உடலையும் உரித்து சுவைக்கிறான் இந்த ஆளு
புல் புண்ணாக்கை அசைபோட்டுவிட்டு சுவையான பால் தருகிறது மாடு
பிறரை புண்ணாக்காக எண்ணி, அவனிடமே பிடுங்கி சாப்பிடுவது ஆளு
பசி எடுக்கும்போது, இன்னொரு விலங்கை கொன்று உண்டிடும் சிங்கம்
பசி தணிந்தாலும் பணருசி என்றுமே தணியாத பேராசைகொண்ட ஆளு
உடலால் உயர்ந்து பெருத்திருப்பினும் சைவ உணவே உண்ணும் யானை
உடல் மனம் சிறுத்திருப்பினும் அசைவத்தையே அதிகம் உண்ணும் ஆளு
எப்போதாவது ஒருமுறை கடித்தாலும், நன்றியுணர்வுடன் இருப்பது நாய்
எந்நேரமும் பிறரை உடலாலும் மனதாலும்
நமக்கு மிகவும் வியப்பையும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் பல சந்தேகங்களை கொடுக்கும் விஷயம்தான் கடவுள் எனும் சொல். என்னை பொறுத்த வரையில், உலகில் பிறந்த அல்லது பிறக்கும் எவரும் கடவுள் இல்லை. கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்று சொல்லப்படுபவர்கள் எவரும் கடவுளை கண்டதுமில்லை, பிறருக்கு காட்டியதும் இல்லை. ரமண மகரிஷி தன்னைத்தானே உணர்ந்தார் என்பதும், ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு கடவுளை காட்டினார் என்பதெல்லாம் பிறர்க்கு தெரிவிக்கமுடியும் சாதாரண விஷயங்கள் அல்ல. எப்படி ஒருவருக்கு தலைவலி என்றால் 'எனக்கு தலைவலி' என்று மட்டுமே கூறமுடியும், அதை பிறர் கண்ணுக்குத் தெரிய, அவர்கள் தெளிந்து உணர்ந்து கொள
சமீபத்தில் நான் என் குடும்ப உறுப்பினர்களுடன் கேரளாவில் உள்ள குருவாயூர் மற்றும் வேறு சில கோவிகளுக்கு சென்று வந்தேன். இந்தப்பயணம் குறித்து சில செய்திகளை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
குருவாயூர் கோவிலின் மிக அருகாமையிலேயே உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு இரவுகள் நாங்கள் தங்கினோம். மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படும் நல்ல ஹோட்டல் இது. இரவு படுத்துறங்கும் நேரம் தவிர வேறு எந்த நேரத்தில் கேட்டாலும் சூடான வெந்நீர் இங்கு கிடைத்து.
குருவாயூர் கோவில் வளாகம் மிகவும் சுத்தமாக இருந்தது. கேரளாவின் எல்லா கோவில்களுக்கும் அழகு சேர்ப்பது கோவிலில் உள்ள எண்ணெய் தீபங்கள் மற்றும் விளக்குகள் தான். ஒவ்வொரு கோவிலிலும்
அப்போது என் வயது சுமார் பதிமூன்று. அந்தப் பின் மத்திய வேளையில் வீட்டில் என்னைச் சுற்றி யாரும் இல்லை. சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் என் வீட்டில் சாய்ந்து கொள்ளும் நாற்காலி ஒன்றில் நான் சாய்ந்த வண்ணம் இருந்தேன். அந்த நேரம் மதியமும் இல்லை மாலையும் இல்லை. வெயிலும் அதிகம் இல்லை. என் கண்களை மூடிய வண்ணம் இருந்தேன்.
"ஆஹா, எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. எங்களது சொந்த வீடு. இத்தனை வருடங்கள் இந்த வீட்டில் காலத்தை ஒட்டிவிட்டேன். இனி வரும் காலங்களிலும் இந்த வீட்டில்தான் இருப்பேன். ஏன், நான் இதே சாய்வு நாற்காலியில் இந்த இடத்திலேதான் இறப்பேன். எனக்கு உலகில் வேறு எதுவும் தேவை இல்லை. பணம் வேண்டாம் ஆனால் அம்மாவின
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நல்லதை நினைப்போம்...!!
உதவிகள் செய்வோம்...!!
மானுடம் வாழ மனித நேயம் காப்போம்...!!
'எழுத்து' குழுமத்தினருக்கும் மற்றும் என் நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
தாம்பரத்தில் தாம்பூலம் வாங்கி, தாமதமாக ஈஎம்யூ ஏறினேன்
சானடோரியத்தில் சாணை பிடித்து காரியத்தில் இறங்கினேன்
குரோம்பேட்டில் குள்ள குலோத்துங்கனை கண்டு குளிர்ந்தேன்
பல்லாவரத்தில் பல் இளிக்கும் பல்லில்லாதவளை கண்டேன்
திருசூலத்தில் திருதிருவென திரிந்து தெரியாம திரும்பினேன்
மீனம்பாக்கத்தில் மீனாவிடம் மீசையை மெல்ல முறுகினேன்
பழவந்தாங்கல் பழக்கடையில் பழுத்த பழங்கள் முழுங்கினேன்
பரங்கிமலையில், பறிக்காத பரங்கிகாயை பிடித்துப்போட்டேன்
கிண்டியில், வண்டில சுண்டல் கிண்டியவரை கிண்டலடித்தேன்
சைதாப்பேட்டைல சைட்ல சைட்அடித்தவளை சைட் பண்ணேன்
மாம்பலத்தில் இம்மாம்பெரிய மாம்பழங்கள் பார்த்து
அசைவ உணவு உண்ணும் வாசகர்களின் கவனத்திற்காகவே இந்த
கட்டுரையை எழுதுகிறேன். இன்று, உலகில் கிட்டத்தட்ட 22% மக்கள் சைவ உணவை உண்பவர்களாக இருக்கிறார்கள். பல விஷயங்களுக்கு உதாரணமாக கொள்ளப்படும் அமெரிக்காவில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சைவ உணவு உண்பவர்கள் சதவிகிதம் 1.2% இருந்தனர். தற்போது இது அதிகரித்து 5% ஆக உயர்ந்து இருக்கிறது. எனவே, உலகத்தில் சைவ உணவை உண்போர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறது. சைவ உணவு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை குறைக்கிறது என்று உலக மருத்துவ வட்டாரங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதைப்போலவே, பல உலக மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள், சைவ உணவு எடுப்பதால