Ramasubramanian- கருத்துகள்
Ramasubramanian கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [66]
- Dr.V.K.Kanniappan [33]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [18]
- Ramasubramanian [16]
நன்றி . என் கற்பனை வளம் எனும் கிணற்றிலிருந்து முங்கி எடுக்கப்பட்ட எழுத்துகள்தான் இவை. என்னுடைய சுயமான தனித்துவமான கருத்து. இதுதான் என் சிறப்பு. நான் இந்த கவிதைபோன்ற எண்ணங்களை, என் திருப்திக்கும் மற்றும் கலையுணர்வை தணிக்கும் எண்ணத்துடன்தான் எழுதுகிறேனே தவிர, மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு பழனி ராஜன் அவர்களே
உங்களின் எண்ணங்களை கண்டேன். ஒருவர் எழுதிய விஷயங்களை சரியாக உள்வாங்கி சிந்திக்காமல், அவர் குறிப்பிட்ட விஷயங்களை ஆழமாக அலசி ஆராயாமல் , அவர் எழுதிய விஷயம் உங்களது நம்பிக்கைக்கு மாறுபட்டுள்ளது என்கிற ஒரே காரணத்தால், இந்த கட்டுரையை நீங்கள் இவ்வாறு ஏசியிருக்கிறீர்கள்.
என்னுடைய இந்த கட்டுரைக்கு நீங்கள் எங்கே ஒரு பொருத்தமான எதிர் கட்டுரையை பதிவு செய்யுங்கள், பார்க்கலாம் . அதை நான் வரவேற்பேன். ஆனால், நீங்கள் கடவுளை நேராக காணாமல், மெய்யாக உணராமல், திருமூலர் சொன்னார் , முன்னோர்கள் சொன்னார்கள் என்று பலர் அரைத்த மாவையே அரைக்கிறீர்கள்.
முதலில், ஒருவரது மனதை புண்படும் விதமாக எழுதாமலிருக்க பழகிக்கொள்ளுங்கள். தவறாக நினைக்கவேண்டாம். என்னுடைய கட்டுரைக்கு சவுக்கடி கொடுக்கும் உங்களது கட்டுரையை இந்த வலயத்தளத்தில் கூடிய விரைவில் எதிர்பார்க்கிறேன். இந்த கட்டுரையில் நீங்கள், பழனி ராஜன் என்கிற தனி மனிதர், கடவுளை கண்டார் என்பதற்கான சான்றையும் கொடுக்கவேண்டும். நன்றி.
பெரிய அளவில் நான் ஒன்றும் எழுதவில்லை, ஐயா. கேரளா கோவில்களில் உள்ள சுத்தம்தான் என்னை இந்த கட்டுரையை எழுதவைத்தது. காலடி சென்று வந்ததைப்பற்றி சிறிதளவில் தான் எழுதவேண்டும் என்றிருந்தேன். ஆனால், ஆதி சங்கரரை பற்றி எழுதுகையில் என்னையறியாமல் கொஞ்சம் கட்டுரையின் தன்மையை ஆன்மீகத்துடன் இணைத்துவிட்டேன். உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்.
பழனி ராஜன் நண்பரே
நான் இந்தக்கட்டுரையைப் பதிவுசெய்து அரைமணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக நீங்கள் அதைப்படித்துவிட்டு உடனுக்குடன் உங்களின் அருமையான கருத்துக்களையும் தெரிவித்து என் தாய்ப்பாசத்துடன் ஒன்றிப்போய்விட்டர்கள்.உங்களைப்போன்ற ஒரு வலைதள நண்பர் அமைந்ததை என் பாக்கியமாகக்கருத்துகிறேன்.
மிக்க நன்றி!
திரு பழநி ராஜன் அவர்களே
உங்கள் கருத்துக்களை நான் மதிக்கிறேன். நான் இந்த செய்தியை கவிதை என்ற பகுதியில் அல்லாது நகைச்சுவை என்ற பகுதியில் தான் பதிவு செய்திருக்கிறேன்.
இது வெறும் நகைச்சுவை மட்டுமே அன்றி, கவிதை அல்ல பாடல் அல்ல என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
நன்றி!
இனிய தோழர் கோபிநாத்
உங்கள் பின்னோட்டம் கண்டு என் மகிழ்ச்சி முன்னோட்டம் கண்டது.
நீங்கள் குறிப்பிட்ட இரண்டும் இரு தீவிர நிலைகள் என்று தான் எனக்கு படுகிறது. என் கணிப்பில் சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.
நான் குறிப்பிடும் உறவினருக்கு ஒரே மகன். அமெரிக்க குடிமகன். பெரிய பன்னாட்டு கம்பெனி, உயர்ந்த பதவி.
இவரும் இவர் மனைவியும் தான் வீட்டில். சில கோடிகள் இருக்கும் இவரது சொத்துக்கள். இருப்பினும் செலவழிக்க மனமே வராது.
இவரை 40 ஆண்டுகளுக்கு மேலாக கவனித்த பின் தான் இந்த உண்மை நகைச்சுவையை பகிர்ந்து கொண்டேன்.
என் கூற்றில் ஏதேனும் குறை இருப்பின், பொறுத்தருள வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன், புன் சிரிப்புடன்! 👍👍
இனிய ஜீவன் தோழரே
ஒரு இளைய தலைமுறை வாலிபர் என் எழுத்துக்களை பசித்து, ரசித்து, ருசித்து, புசித்து மகிழ்ந்து, அகம் நெகிழ்ந்து, உளமார போற்றியதை எனக்கு இளைஞர் சமுதாயத்தின் ஒரு சிறப்பு பரிசாக கருதுகிறேன்.
வாழ்க நீங்கள், வாழ்க உங்கள் பெரிய மனது! 👍👍👍
தங்களின் பாராட்டு மிகவும் அருமை ஐயா! தங்களுக்கும் பிறர்க்கு உதவும் தயாள குணம் கண்டிப்பாக இருக்கும் என்பதில் எனக்கு இம்மியளவும் சந்தேகம் இல்லை. என் நன்றி கலந்த வணக்கங்கள். தங்களின் சிறப்பான சிந்தனைகள் சிறந்து ஓங்க என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
தங்களின் கருத்து பதிவிற்கு நன்றி.
நண்பர் பழனி ராஜன் அவர்களே, தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏🙏🙏
நண்பர் பாளை பாண்டி அவர்களே, உங்கள் பாராட்டில் களிப்பு கடலில் மூழ்கி எழுந்தேன். மிக்க நன்றி.
நன்றி நண்பரே ! நன்றாக சொன்னீர்கள் நன்னாடன் அவர்களே! வலியவைகள் என்றும் வென்று கொண்டுதான் இருக்கிறது! மனித நேயம் வலிமை அடையாமல் ஏன் எப்போதும் மெலிந்து கிடக்கிறது என்பதே என் உள்ளம் குமுறும் வேதனை!
பெரும்பேறும் புகழும் எல்லோருக்கும் அமைவதில்லை
பணமும் பொருளும் எல்லோரிடமும் புரளுவதில்லை
அழகும் பண்பும் அனைவரிடமும் காணப்படுவதில்லை
எளிமை தன்னடக்கம் எல்லோரிடமும் இருப்பதில்லை
நேர்மை உண்மை அனைவரிடமும் குடிபோகவில்லை
தர்மம், நீதி அனைவரையும் இறுக கட்டிபோடவில்லை
அன்பு பாசம் எல்லா உறவுகளிடமும் நிறையவில்லை
ஆசை, பசி இல்லாமல் இந்த உலகில் எவரும் இல்லை
மிக்க மகிழ்ச்சி. நன்றி
மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றி வெங்கட் சகோதரரே!
மிக்க நன்றி சகோ..
வால்டர் சகோ, மிக்க நன்றி.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கோவை சுபா அவர்களே !
நண்பர் கோடீஸ்வரன் அவர்களே, உங்களது அன்பான கருத்து கோடியில் ஒன்று. மிக்க நன்றி.
இனிய நண்பர் சுரேஷ் அவர்களே, உங்கள் உயர்வான பாராட்டுக்கு என் தாழ்மையான வணக்கமும் நன்றியும்.