சொல்லுங்களேன் ஏன் என்று
நாம் தவறுகள் செய்ய காரணம் ஆண்டவன் செய்த பெருந்தவறு!
சும்மா தூங்கிக் கொண்டிருந்த நம்மை
விஷம் விஷமம் நிறைந்த இவ்வுலகில் நம்மை படைத்தது யார் குற்றம்?
(நாம் தவறுகள் செய்ய காரணம் ஆண்டவன் செய்த பெருந்தவறு )
ஆணே இங்கு ஆள அவஸ்தை படுகையில் பெண் என்ற அளவற்ற செல்வத்தை படைத்தது யார் குற்றம்?
குணம் என்றால் என்ன என்று தேடித் தேடி தவிக்கையில் பணம் என்ற அரக்கனை மனிதன் படைக்கக் காரணமாக இருந்தது யார் குற்றம்?
பணம் இருப்பின் மதிப்பு அது இல்லை எனில் மிதிப்பு என்ற கேவலமான சமுதாய சூழ்நிலை உருவானது யார் குற்றம்?
(நாம் தவறுகள் செய்ய காரணம் ஆண்டவன் செய்த பெருந்தவறு)
சுயநலவாதி தீவிரவாதி ஏமாற்றுவாதி
நன்றாக சாப்பிட்டு நிம்மதியாக தூங்க
நல்லதை நினைப்பவனும் நல்லதையே செய்பவனும் சாப்பாட்டுக்கே அல்லோலப்படுவது யாருடைய குற்றம்?
ஒரு புறம் ஒருவன் மானத்தை மட்டுமே காக்கும் ஆடை அணிந்து தெருத்தெருவாக பிச்சை எடுத்துக் கொண்டு இருக்க, இன்னொருவன் தன் ஒரு குடும்பத்தினருடன் 27 மாடிகள் கொண்ட வீட்டில் பணத்தில் உருண்டு புரண்டு கேளிக்கை புரிந்து வாழ்ந்து வருவது யாருடைய குற்றம்?
(நாம் தவறுகள் செய்ய காரணம் ஆண்டவன் செய்த பெருந்தவறு)
உண்மை நேர்மை ஒழுக்கம் அன்பு கருணை தியாகம் போன்ற உயர்ந்த ரக வார்த்தைகளை வார்த்தை அளவில் மட்டுமே உபயோகிக்கும் அவலமான கொடுமையான நீச்சமான வாழ்க்கை இங்கு அமைய யார் காரணம்?
(நாம் தவறுகள் செய்ய காரணம் ஆண்டவன் செய்த பெருந்தவறு)
உங்களில் யாருக்காவது இதற்கு தக்க பதில் இருந்தால் சொல்லுங்களேன்!
வெட்கம் மானம் ரோஷம் சுயமரியாதை மறந்த இவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன்? சொல்லுங்களேன்!
(நாம் தவறுகள் செய்ய காரணம் ஆண்டவன் செய்த பெருந்தவறு)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
