பெண்ணே

பெண்ணே!

மருளும் உந்தன் மான்விழிகள்
மாற்றம் தேடி மலரட்டும்
மாசு படர்ந்த இப்பூவுலகம்
மங்கை உன்னால் மாறட்டும்
தளிரே! உந்தன் பேருயர்வால்
தரணி எல்லாம் செழிக்கட்டும்
பெண்ணே உன்னை மண்ணெனச் சொல்லும்
பேதையர் எண்ணம் அழியட்டும்
எழுந்திடு கண்ணே! உறக்கம் போதும்
எதிர்வரும் தடைகளை உடைத்திடு நீயும்.

புன்னகை மலரால் பூமியை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றும் அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்

எழுதியவர் : த.கிருத்திகா (8-Mar-22, 6:54 am)
Tanglish : penne
பார்வை : 1461

மேலே