கிருத்திகா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கிருத்திகா
இடம்:  காட்டம்பட்டி
பிறந்த தேதி :  04-Nov-2001
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Jan-2022
பார்த்தவர்கள்:  341
புள்ளி:  10

என்னைப் பற்றி...

தமிழாசிரியை, ஶ்ரீமகா மேல்நிலைப் பள்ளி, ஈங்கூர்

என் படைப்புகள்
கிருத்திகா செய்திகள்
கிருத்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2022 6:54 am

பெண்ணே!

மருளும் உந்தன் மான்விழிகள்
மாற்றம் தேடி மலரட்டும்
மாசு படர்ந்த இப்பூவுலகம்
மங்கை உன்னால் மாறட்டும்
தளிரே! உந்தன் பேருயர்வால்
தரணி எல்லாம் செழிக்கட்டும்
பெண்ணே உன்னை மண்ணெனச் சொல்லும்
பேதையர் எண்ணம் அழியட்டும்
எழுந்திடு கண்ணே! உறக்கம் போதும்
எதிர்வரும் தடைகளை உடைத்திடு நீயும்.

புன்னகை மலரால் பூமியை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றும் அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்

மேலும்

கிருத்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2022 10:37 pm

தமிழ்

உலகாளும் மொழியே
உயர்ந்தோர்கள் வழியே
உருவான தமிழே
நீ வாழியவே!
மிளிர்கின்ற மொழியாம்
உனைப் பார்த்துத்தானே
மேல்நாட்டு அறிஞர்
வியந்திடவே
அழகே! என் அமுதே!
அறிவார்ந்த மொழியே!
உனை உள்ள அறையில்
வைத்து வணங்கிடுவேன்
கண்ணுக்குள் மணியாய்
கருத்துக்குள் அணியாய்
காட்சி தரும் உன்னைக்
காக்க உழைத்திடுவேன்
விண்ணோர்கள் விதிக்க
மண்ணோர்கள் மதிக்க
என்னோடு உறவாடும்
செந்தமிழே!
மனதோடு நினைவாய்
நினைவோடு செயலாய்
உனைநானும் துதிப்பேன்
தூய்மொழியே!
கலையோடு பிறந்து
நிலையோடு உயர்ந்து
மலையோடு மோதும்
என் பைந்தமிழே!
வண்ணம்

மேலும்

கிருத்திகா - கிருத்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2022 7:37 pm

என்னவளே!

கண்ணில் என்னைச் சிறைபிடித்தாய்
விண்ணில் நிலவாய் நீசிரித்தாய்
பெண்ணில் நீயே அழகானாய்
மண்ணில் உலவும் நிலவானாய்

கொடியென வளையும் இடையாளே!
நொடியினில் மனதில் நுழைந்தாயே
கடிமலர் உன்னை எண்ணித்தான்
விடியலில் இமைகள் விரிக்கின்றேன்

அதரம் சுருங்கும் அழகினிலே
உதிரம் சுண்டிப் போகுதடி-உன்
மதுரம் பொங்கும் பேச்சினிலே-என்
மதியும் மயங்கி வீழுதடி

உன்னைப் பார்த்த நாள்முதலே
என்னை மறந்தேன் நீள்குழலே
கன்னம் சிவந்த கனிமொழியே
சொன்னேன் கவிதை தமிழ்வழியே

மேலும்

பேரன்பும் பெருநன்றியும் 02-Feb-2022 10:31 pm
மதுரம் பொங்கும் பேச்சினிலே மதியும் மயங்கி வீழுதடி.... அருமையான சொல்லாடல் கொண்டு சிறப்பான பதிவு ...வாழ்த்துக்கள் 02-Feb-2022 7:48 pm
கிருத்திகா - கிருத்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2022 7:44 pm

அப்பா...

தோளின் மேலே என்னைச் சுமந்தாய்
துவண்ட போதென் துன்பம் துடைத்தாய்
என்றும் உன்னை மனதில் வைக்கும் உந்தன் பிள்ளையே நானும்
எங்கு சென்றாய் என்னைப் பிரிந்து எந்தன் தந்தையே

கண்ணில் நீர் பொங்கி அழுதேனே
கருத்தில் உனை வைத்துத் தொழுதேனே
எந்தன் அன்புதான் தெரியாதா?
ஏங்கும் என்மனம் புரியாதா?

அழுகின்றேனே உந்தன் பிள்ளை
ஆறுதல் சொல்ல யாரும் இல்லை
அப்பா உன்னைக் காணவில்லை
அகிலத்தில் எங்கும் தெய்வம் இல்லையே

நீயில்லா இந்த உலகத்திலே
நிம்மதி இல்லை நெஞ்சினிலே
உன்னை நினைத்திந்த பெண்கிளியே
உருகிப் பாடுதொரு சிறுகவியே

துயரத்தைச் சொல்ல மொழிகள் இல்லை
துடிக்கின்றதே இங்கு உந்தன் பிள்ளை
அன்பு

மேலும்

உள்ளம் கனிந்த நன்றிகள் சகோதரரே 02-Feb-2022 10:29 pm
அப்பா பற்றிய அற்புத வரிகள்...நன்று சகோதரி 02-Feb-2022 7:52 pm
கிருத்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2022 7:44 pm

அப்பா...

தோளின் மேலே என்னைச் சுமந்தாய்
துவண்ட போதென் துன்பம் துடைத்தாய்
என்றும் உன்னை மனதில் வைக்கும் உந்தன் பிள்ளையே நானும்
எங்கு சென்றாய் என்னைப் பிரிந்து எந்தன் தந்தையே

கண்ணில் நீர் பொங்கி அழுதேனே
கருத்தில் உனை வைத்துத் தொழுதேனே
எந்தன் அன்புதான் தெரியாதா?
ஏங்கும் என்மனம் புரியாதா?

அழுகின்றேனே உந்தன் பிள்ளை
ஆறுதல் சொல்ல யாரும் இல்லை
அப்பா உன்னைக் காணவில்லை
அகிலத்தில் எங்கும் தெய்வம் இல்லையே

நீயில்லா இந்த உலகத்திலே
நிம்மதி இல்லை நெஞ்சினிலே
உன்னை நினைத்திந்த பெண்கிளியே
உருகிப் பாடுதொரு சிறுகவியே

துயரத்தைச் சொல்ல மொழிகள் இல்லை
துடிக்கின்றதே இங்கு உந்தன் பிள்ளை
அன்பு

மேலும்

உள்ளம் கனிந்த நன்றிகள் சகோதரரே 02-Feb-2022 10:29 pm
அப்பா பற்றிய அற்புத வரிகள்...நன்று சகோதரி 02-Feb-2022 7:52 pm
கிருத்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2022 7:37 pm

என்னவளே!

கண்ணில் என்னைச் சிறைபிடித்தாய்
விண்ணில் நிலவாய் நீசிரித்தாய்
பெண்ணில் நீயே அழகானாய்
மண்ணில் உலவும் நிலவானாய்

கொடியென வளையும் இடையாளே!
நொடியினில் மனதில் நுழைந்தாயே
கடிமலர் உன்னை எண்ணித்தான்
விடியலில் இமைகள் விரிக்கின்றேன்

அதரம் சுருங்கும் அழகினிலே
உதிரம் சுண்டிப் போகுதடி-உன்
மதுரம் பொங்கும் பேச்சினிலே-என்
மதியும் மயங்கி வீழுதடி

உன்னைப் பார்த்த நாள்முதலே
என்னை மறந்தேன் நீள்குழலே
கன்னம் சிவந்த கனிமொழியே
சொன்னேன் கவிதை தமிழ்வழியே

மேலும்

பேரன்பும் பெருநன்றியும் 02-Feb-2022 10:31 pm
மதுரம் பொங்கும் பேச்சினிலே மதியும் மயங்கி வீழுதடி.... அருமையான சொல்லாடல் கொண்டு சிறப்பான பதிவு ...வாழ்த்துக்கள் 02-Feb-2022 7:48 pm
மேலும்...
கருத்துகள்

மேலே