கண்டு வந்தேன் கொண்டு வந்தேன்
கண்டு வந்தேன்
கொண்டு வந்தேன்..!
தோ ட்டமும் கண்டு வந்தேன்
அகமுடன் விழி குளிர
தோட்டமும் கண்டு வந்தேன்..!
மா, வாழை கொய்யா
தேக்குத் தென்னை விளை
தோட்டமும் கண்டு வந்தேன்..
தோழமை தோழியரே - நான்
தோட்டமும் கண்டு வந்தேன்..!
காணி நிலம் வாங்கி - அதில்
பேணி வளர்கின்றோம்
பாகல் வெண்டையுண்டு
பனை சந்தன மரமுண்டு..!
பொங்கி வரும் நீரும்
பூமி அருளாலே
எங்கும் பச்சைப் பசுமை
எங்களின் தோட்டத்திலே.
எங்களின் தோட்டத்திலே. !
கொய்யா மரத்தினிலே
வெளிர் மஞ்சள் நிறத்தினிலே
வெண்ணெய் குழைத்த நிறம்
பூவினில் தேன் குடிக்கும்
போதை வண்டுடனே
கனிதருமந்த
பூக்களும் கண்டு வந்தேன்
களிப்பினை
நெஞ்சினில்ஏந்தி வந்தேன்..!
கண்ணை மயக்கியது - பின்னே
எண்ணம் மயக்கியது
சொக்கி நின்றேன் அழகில்
சொந்தகள் சேர நின்று..
சோர்வுகள் வேரகன்று..!
என்றென்றும் இந்நிலையே
வேண்டுகிறேன்
இன்பங்கள் சூழ்ந்திடவே
வந்தருள்வாய் இறைவா
வரமும்
தந்தருள்வாய் இறைவா..!
பச்சை பசுமை எங்கும்
இச்சை கொண்டு இரசித்தேன்
பாங்கரும் பாங்கியரும்
பார்க்கவே கொண்டு வந்தேன்
பக்குவமாய் படமும்
பிடித்தே
பார்க்கவும் கொண்டு வந்தேன்..!
#சொ.சாந்தி

