உங்களின் பார்வை யாது

#உங்களின் பார்வை யாது..?

இலையுதிர் காலத்தில்
சருகுகளை உதிர்க்கும் மரங்கள்
சோகத்தில் ஆழ்வதில்லை..

அடுத்த காலம் இளவேனில்
என்பதில்
உறுதியான நம்பிக்கை..
மரத்திற்கும் உண்டு..!

பூத்துக் குலுங்கும்
மலர்களைத் தாங்குவதில்
பரிபூரண மகிழ்ச்சி
மரத்திற்கு..!

மலர்கள்
எந்த மரத்திற்கு
பாரமாய் இருந்திருக்கிறது..?

மலர்களோடு வாசம் வீசும்
பூமரங்கள்
எவரிடத்தும்
பெருமை பேசித் திரிவதை
கண்டிருக்கிறீர்களா..?

வண்ண மரத்தினை
இரசிக்கும் மனம் படைத்தோர்
இலையுதிர் காலங்களில்
அதன் கிளைகளை
வெட்டும் எண்ணம் கொள்வதில்லை..

இளவேனிற்கான தவங்கள்
என்றும் இன்பமானதே என்பது
நேயம் மிக்கோருக்கே
உரியது..!

மரத்தினை
காணும்போதெல்லாம்
கட்டில்.. கதவுகள்..சாளரங்கள்..
நினைவிற்கு வருமென்றால்
அனைவரும் கிராதகர்களே..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (2-Sep-25, 10:52 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 45

மேலே