நல்லோரையும் வீழ்த்தும் பணம்
முப்பது வருடங்கள் வேறு மாநிலத்தில் வாழ்ந்து
ஆசையுடன் அடைந்தேன் கோவையை, மகிழ்ந்து
அன்பு மக்களின் பேச்சில் உருகினேன், நெகிழ்ந்து
புது இல்லம் புகுந்தேன், வாழ்த்து மழை பொழிந்து
கோவை மண்ணில் பேச்சில் மரியாதையை உண்டு
சிறுவாணி தண்ணீரில் சுவை அதிகமாகவே உண்டு
அன்னபூரணா உணவில் அறுசுவை மிகவும் உண்டு
ஆனாலும் இங்கும் லஞ்சம் என்ற அரக்கன் உண்டு
மனிதன் படைக்கப்பட்டான், அறிவுடன் கொஞ்சம்
இவனோ சரணடைந்தான் " பணமே, நீயே தஞ்சம்"
மற்றவையில் இருக்கிறதோ இல்லையோ பஞ்சம்
லஞ்ச விவகாரத்தில் மட்டும் இல்லை ஒரு பஞ்சம்
என் தாய் நாடு பாரதம் என்பதில் என்ன பெருமை?
எப்போதும் இருக்கிறதே லஞ்சம் என்கிற சிறுமை
பிச்சை எடுப்பது போல, இது லஞ்சத்தின் தன்மை
வாய்மை, நேர்மை வார்த்தையில் தான் இனிமை
கறைபடியா கைகள் துண்டிக்கப்படுவது உண்மை!
தெய்வீக மானிடரை உருவாக்குமா நம் கோவை?