நெஞ்சம் மகிழும் நிறையும்
இரயில் புறப்பட்டபோது
ஒரு செருப்பு கழன்று
வெளியில் விழுந்து விட்டது,
மரியாதைக்குரிய மாமனிதர்
மகாத்மா காந்தி தயங்காமல்
மற்றொரு செருப்பையும் கழற்றி
தண்டவாளத்தில் போட்டார்
ஒரு செருப்பை இழந்த பின்னே
இன்னொரு செருப்பால்
பயன் ஏதுமில்லை என்றும்
அந்த ஒற்றை செருப்பை
எடுத்தவருக்கும் உதவாது
என்பதால் அடுத்த செருப்பையும்
அங்கேயே கழற்றி போட்டு விட்டார்
தான் இழக்கும் இழப்பு
அடுத்தவருக்கு பயனுள்ளதாக
அமைய வேண்டும் என்ற
பரந்த மனப்பான்மை
எல்லோருக்கும் இருக்க வேண்டும்,
நமக்கு ஏற்படும் இழப்பை
அடுத்தவருக்கு லாபமாக்கினால்
நெஞ்சம் மகிழும் நிறையும்