பின்புறணி பேசாது பேரன்பாய் வாழ்ந்துவரின் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
முன்னையோர் செய்தவமே முந்திவந்துன் னைக்காக்கும்
நன்னலம் எண்ணினர்க்கே நாளுமே – இன்பமென்பேன்
பின்புறணி பேசாது பேரன்பாய் வாழ்ந்துவரின்
இன்னலினை நீக்கல் எளிது!
- வ.க.கன்னியப்பன்