கவ்வுயா கவ்வுயா

கவ்வுயா, கவ்வுயா!
@@@@@@@@@@@

(தெருவில் போகும் இரு இளைஞர்களில் ஒருவன்)
அந்த வீட்டுப் பாட்டி "கவ்வுயா, கவ்வுயா"ன்னு இரண்டு தடவை

சொன்னாங்க. யாரையோ எதையோ கவ்வச் சொல்லறாங்க.

அவுங்க சொல்லறதைக் கவ்வி யாருக்காவது தொண்டையில

மாட்டிக்கப் போகுது. வா, போயி என்னன்னு கேட்போம்.

(அந்த வீட்டின் வாசல் கதவு திறந்திருக்க அங்கு நின்று); பாட்டிம்மா

பாட்டிம்மா.

@@@@@@@@@@

யாருடா பசங்களா நீங்க? என்ன வேணும்?

@@@@@@@

யாரையோ கவ்வச் சொல்லி இரண்டு தடவை சொன்னீங்க. நீங்க

சொன்னது எங்க காதுல விழுந்தது. வீட்டில இருக்கிற யாராவது

நீங்க சொன்னதைக் கவ்வி அவுங்க தொண்டையில மாட்டிக்கப்

போகுது. ஆபத்தாப் போயிடும்.

@@@@

போங்கடா போக்கத்த பசங்களா. எண்ட பேத்தி பேரு தான்

கவ்வியா. அவளைத் தான் நாங் கூப்புட்டேன்.

@@@@@@@@@

ஓ.... 'கவ்யா' -வா?

@@@@@@@@

ஆமாம். ஆமாம் கவ்வுயா தான்.

@@@@@@@@

சரி. அந்தப் பேரை ஏன் வச்சீங்க. அந்தப் பேருக்கு என்ன

அர்த்தம்?

@@@@@

நான் என்னத்தக் கண்டேன்? எண்ட பேரனைத் தான் கேக்கணும்.

@@@@@@@@

பக்கத்தூட்டு பெண் குழந்தை பேரு 'நவ்வுயா'. எண்ட பேரன்

எண்ட பேத்திக்கு 'கவ்வுயா' -ன்னு பேரு வச்சுட்டான்.

@@@@

ஓ... அப்பிடியா. கவ்யா நல்ல பேரு தான் பாட்டி. நாங்க வர்றோம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Name Navya generally means Worth praising or Young is a Feminine (or Girl) name

எழுதியவர் : மலர் (7-Sep-25, 10:38 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 22

மேலே