பேரின்பம்
கரும்பின் அமுத ரசம்
சுவைத்தால் அன்றி தெரியாது அதுபோல்
இறைவன் நாமம் வாயினால் பாடி
மனதினால் சிந்தித்து சுவைத்தாலன்றி
ஒருபோதும் புரியாதுபுரிந்துகொண்டால்
இம்மையும் மறுமையும் சேர்க்கும்
பேரின்பம் அதுவே அறி