வளர்ந்து தேயும் சமுதாயம்

காலத்தின் அளவு மாறவில்லை அதன் கோலம் தான் மாறிவிட்டது
இயற்கை அழகு மாறவில்லை, ஆனால் அதன் எழில் மாறிவிட்டது
நீதியும் நேர்மையும் மாறவில்லை அவற்றின் பொருள் மாறிவிட்டது
இதயம் இடமாற்றம் அடையவில்லை, அதன் இதயமே மாறிவிட்டது
இயல் இசை நாடகம் மாறவில்ல்லை,இவற்றின் திசை மாறிவிட்டது
சங்கீதத்தின் இன்னிசை மாறவில்லை, அதன் இங்கீதம் மாறிவிட்டது
மனிதன் அறிவில் மாற்றம் இல்லை, ஆனால் சிந்தனை மாறிவிட்டது
பெண்கள் பெண்களாய் உள்ளனர், இவரின் அகக்கண்கள் மாறிவிட்டது
அன்றும் குழந்தைகள் இன்றும் குழந்தைகள் ஆனால் தெய்வீகமின்றி
அன்று சமயலறையில் மட்டுமே பெண்கள், இன்று எங்கு பார்த்தாலும்
வீட்டில் ஈயை ஒட்டிய பெண் இன்று போர்விமானத்தை ஒட்டுகிறாள்
கோயில் வாசல் பிச்சைகாரன் இன்று மாலின் உள்ளேயும் இருக்கிறன்
பக்கத்துவீட்டாருடன் ஆடினோம், இன்று கைபேசியில் தேடுகிறோம்
அன்று சாவகாசமாக இருக்க ஹோட்டல் சென்று உணவருந்தினோம்
இன்று வீடே தவமாக கொண்டு ஸ்விக்கியில் உணவு தருவிக்கிறோம்
அன்று வளர்ப்பு நாயும் பூனையும் நம் வீட்டு திண்ணை வரை வந்தது
இன்று அவை கட்டிலில் சொகுசாக தூங்குகிறது, திண்ணையில் நாம்
அன்று கடும் குற்றங்கள் செய்தவர்கள் உரிய தண்டனைகள் பெற்றனர்
இன்று பெரும் குற்றம் செய்பவர்கள் பிறரைக் கண்டித்து பேசுகின்றனர்
இன்றைய சமுதாயத்தின் போக்கு மிகவும் விசித்திரமாகவே உள்ளது
நாமும் மாறிய சமுதாயத்தின் ஒரு பங்கு என்பது வியப்பாக உள்ளது!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (26-Feb-22, 6:53 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 56

மேலே