பூத்தது புது மலர்
அன்று
மொட்டுப்போல்
பாவாடை உடுத்தி
பட்டாம்பூச்சி போல்
பறந்து திரிந்தவள்...!!
இன்று
உற்றார் உறவினர்கள்
மனதில் உற்சாகம் பொங்கிட
பாவாடை தாவணியில்
மஞ்சள் பூசி, பொட்டுயிட்டு
பூத்து குலுங்கி வெட்கத்துடன் அமர்ந்திருந்தாள்
புத்தம் புது மலரைப்போல்...!!
--கோவை சுபா