என்னை விரட்டி அடித்தது சென்னை

நான் பிறந்தது சென்னை, யாருக்கும் தெரியாது என்னை?
நான் வளர்ந்தது கோடம்பாக்கம், ஆற்காடு பாலம் பக்கம்
படித்தது ஆர்கேஎம் பள்ளி, ரயில் தண்டவாளத்தை தள்ளி
நான் பிகாம் அரசினர் கல்லூரி நந்தனம், பூசியது சந்தனம்
முதல் வேலை சேர்ந்தது, ரானே மெட்ராஸ், வேளச்சேரி
நாலு வருடங்களிலேயே முடிந்தது அங்கே என் கச்சேரி
பின் டெல்லியை தாண்டி வேலை சேர்ந்தேன் ஹரித்வார்
அங்கே பட்ட துன்பங்களை என்னை தவிர யார் அறிவார்?
உருண்டது இரண்டு வருடங்கள், அதன் பிறகு ஸ்ரீசைலம்
அங்கே தேய்த்துக்கொண்டேன் கிருஷ்ணா நதி தைலம்
வருடம் கடந்து சென்றேன் ராஜஸ்தான் பான்ஸ்வாடா
அங்கே மக்களுக்கு சிறிதும் புரியாதது ,வாடா போடா
பின்னர் சென்றடைந்தேன் சரித்திர புகழ் நகர் ஜான்சி
அங்கு கைப்பிடித்தாள் வாழ்க்கை துணைவி ஜான்சி
இரு வருடங்களுக்குள் இடம் பெயர்ந்தேன் ஹைராபாத்
இங்கேயும் கிடைக்கிறது சுவையான தயிர், சாம்பார் பாத்
ஓரிரு வருட வாழ்கை அல்ல இங்கே முப்பது வருடங்கள்
இங்கே வாழ்வில் மிகவும் மகிழ்ச்சி அடைந்த தருணங்கள்
சொந்த ஊர் சென்னை என்னை நிச்சயம் விரும்பவில்லை
இனி சென்னை வந்து வாழும் எண்ணமே எனக்கு இல்லை
ஒரு தமிழனாய் பிறந்து வடஹிந்தி மொழியை அறிந்தேன்
ஹிந்தி தேசத்தில் ஒரு இந்தியனாக தொழில் புரிந்தேன்
சுந்தர தெலுங்கு தேசத்தின் மொழியை கற்று அறிந்தேன்
இன்று பாரத மண்ணில் இந்திய குடிமகனாக வாழ்கிறேன்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று மனம் நெகிழ்கிறேன்

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Aug-21, 9:18 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 85

மேலே