வினாடி முதல் வருடம் வரை

வருடம் ஒரு முறையேனும் நண்பர் உறவினரை கண்டு வா
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது ஊர் சுற்றிவிட்டு வா
மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் ஒரு புத்தகம் படி
மாதம் ஒரு முறையாவது உன் வீட்டை நன்கு சுத்தம் செய்
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உண்ணாவிரதம் அனுசரி
வாரத்தில் ஒருமுறை உடம்புக்கு எண்ணெய் தேய்த்து குளி
வாரம் இரண்டு முறை எப்படியாவது ,எவருக்காவது உதவு
தினமும் ஒரு முறையாவது வயிறு குலுங்க நன்கு சிரித்திடு
நாளில் இரண்டு முறையாவது இனிய புன்னகையை காண்பி
ஒரு மணிக்கு ஒரு முறை உன் மனநிலையை உற்று கவனி
வாழும் ஒவ்வொரு நிமிடம், உனக்கு வாழ்க்கை தரும் பரிசு
ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியாய் இரு, அதுவே பெரிசு

ஆனந்த் ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Aug-21, 1:09 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 83

மேலே