வயதுக்கு ஆசைகள் உண்டு

எனக்கு இருக்கும் ஆசைகளுக்கு குறைவே இல்லை!
என் வயதோ அறுபதுக்கு மேல் தாண்டவில்லை!

இனிப்பு தான் எப்போதும் என் உற்ற தோழன் மற்றும் தயாதி
அதற்கு இப்போது வரை இல்லை சர்க்கரை வியாதி!

எனக்கு இருக்கும் ஆசைகளுக்கு குறைவே இல்லை!
என் வயதோ அறுபதுக்கு மேல் தாண்டவில்லை!

டி எம் எஸ், எஸ் பி பி, ஏசுதாஸ் அருமையான பாடகர்கள் தான்!
ஆனால் அவர்கள் பாடல்கள், நான் பாடும் அவர்களின் பாடல்களுக்கு பிறகு தான்!

எனக்கு இருக்கும் ஆசைகளுக்கு குறைவே இல்லை!
என் வயதோ அறுபதுக்கு மேல் தாண்டவில்லை!

சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன் நல்ல கதை ஆசிரியர்கள் தான்!
என் கதை கேட்டால் அவர்கள் கதை எல்லாம் கதறிக் கொண்டு ஓடும் என்பதும் விசித்திரமான உண்மை தான்!

எனக்கு இருக்கும் ஆசைகளுக்கு குறைவே இல்லை!
என் வயதோ அறுபதுக்கு மேல் தாண்டவில்லை!

உலகத்தில் எவ்வளவோ உணவுகள் ரசித்து சாப்பிட கிடைக்கிறது!
ஆனால் என் மனைவி சமைக்கும் அன்பு தோய்த்த சைவ உணவு வகைகளை ருசிக்க பேரானந்தம் கிடைக்கிறது!

எனக்கு இருக்கும் ஆசைகளுக்கு குறைவே இல்லை!
என் வயதோ அறுபதுக்கு மேல் தாண்டவில்லை!

20 வயது இளமை ஓடும் ஓட்டத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது!
நான் நடக்கும் வேகத்திற்கு எவ்வளவு பேர் ஈடுகொடுப்பார்களோ, தெரியாது!

எனக்கு இருக்கும் ஆசைகளுக்கு குறைவே இல்லை!
என் வயதோ அறுபதுக்கு மேல் தாண்டவில்லை!

என் உண்மை நண்பர்கள், உற்ற உறவினர்கள் மொத்தமாக,சத்தியமாக பத்து பேருக்கு மேல் கிடையாது!
நான் உலகில் உள்ள ஒவ்வொரு உயிர் வாழும் ஜீவராசிகளுக்காகவும் (உங்களையும் சேர்த்து) வேண்டாத நாளும் கிடையாது!

எனக்கு இருக்கும் ஆசைகளுக்கு குறைவே இல்லை!
என் வயதோ அறுபதுக்கு மேல் தாண்டவில்லை!

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (7-Apr-22, 11:30 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 133

மேலே