அப்பாவின் மரணம்

அப்பா...
நான் தொலைத்த
எந்தன் முகவரி....
எந்தன் முதல்வரி....


கண்ணுல தூசுபட்டா
கதிகலங்கும் என் அப்பா..
கருவிழி கரைய கதறுரேனே..
உங்கள் காதுலையே
கேட்கலையோ?



பக்குவமா பக்கத்திலே
பொத்தி வளர்த்த என் அப்பா....
பாதையில்லா வானத்திலே
பாதியிலே பறந்ததெங்கே ..


கைபிடித்து நடை பழக்கி
மகிழ்ந்திருந்த என் அப்பா..
இன்று
கையொதரி போனதெங்கே...
மீண்டும் கரம் பிடிக்க வருவாரோ?



அப்பா....
நீங்கள் வந்துவிட மாட்டீர்களா என்று
உள்ளம் தேம்புது....
வாசல் வழி பார்த்துதானே
கண்கள் ஏங்குது...


வரமாய் வந்த உறவே
வராமல் போனதன்ன...


பாசம் வைத்தே
வளர்த்தீர்கள் -அப்பா
இன்று
வேசம் களைத்து மறைந்ததெங்கே....



மறுபடியும் மறுபடியும்
மறுஜென்மம் அனைத்திலுமே....
உங்கள் மகளாக பிறந்திடவேண்டும்.....
அதில் என் ஆயுளையும்
உமக்குக் தந்து ..
உங்களை பிரியாமல்
காத்திட வேண்டும்....



அப்பா
நான் சீக்கிரமாய்
தூங்கபோகின்றேன்....
உங்கள் வருகைக்காக
கண்மூடி காத்துகிடக்கின்றேன்...
ஏமாற்றாமல் வந்துவிடுங்கள்...


என் கனவில்.......




கண்ணீருடன்
உங்கள் அன்பு மகள்.....

எழுதியவர் : கோகுலம் (7-Apr-22, 8:20 pm)
சேர்த்தது : Gokulam
Tanglish : appavin maranam
பார்வை : 5269

மேலே