நான் தான் முதல் அமைச்சர்

தாத்தா நீங்க பழம்பெரும் நடிகர். எத்தனை

படங்களில் நடிச்சீங்க.

@@@@@@

மொத்தம் 75 படங்கள்டா மொஜேஷ்.

எல்லாப் படங்களும் வெள்ளி விழாக்

கொண்டாடிய படங்கள். தியாகராஜ

பாகவதருக்கு அப்பறம் என்னைத் தான்

'சூப்பர் ஸ்டார்'ன்னு இரசிகர் மாமன்றம்

அழைத்தது.

@@@@@@

தாத்தா உங்களுக்கு மக்களிடம் நல்ல

செல்வாக்கு இருக்குது. எனக்கு

முதலமைச்சராக தீராத ஆசை. நான்

அழகாக இருப்பதாக பல நடிகர்களே

கூறுகிறார்கள். நீங்க முயற்சி செய்தால்

நான் கோட்டைக்குப் போவேன்

@@@@@@

பேரா மொஜேஷ் உன்னுடைய ஆசை எனது

நீண்ட நாள் கனவு. உன்னை முதல்

அமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்த

பின்பு தான் என் உயிர் பிரியும். புரட்சி

நடிகர் எம்.ஜி. ஆர், நடிகர் திலகம்

சிவாஜிக்கு அப்பறம் நீ தான் அழகான

நடிகரா வலம் வரப்போற. இது நிச்சயம்

நடக்கும். நீ 'புரட்சித் திலகம்' என்ற

பட்டத்தோட திரையில் தோன்றுவாய்.

திரைப் படத்துக்காக மொதேஷ்ங்கிற

உன் பேரை 'மொஷய் ராஜ்'ன்னு

மாத்திக்கணும்.

நம்ம குடும்ப சோதிடர் சொன்ன யோசனை

இது.

@@@@@

சரி நம்ம கட்சிப் பேரை எப்ப

வெளியிடலாம்?

@@@@@@

நாளைக்கு நல்ல நாள் தான். மாலை

ஆறு மணிக்கு நிருபர் கூட்டத்தைக்

கூட்டியிருக்கிறேன். கிழக்குக் கடற்கரை

சாலையோரம் இருக்கும் மிகப்பெரிய

அரங்கம் ஒன்றை பதிவு செய்திட்டேன்.

வாடகை 25 இலட்சம். நடிகர் சங்க

உறுப்பினர்கள் அனைவருக்கும்

அழைப்பிதழ் அனுப்பி உள்ளேன்.

அவர்களைப் பார்க்கவும்

ஆயிரக்கணக்கான இரசிகர்கள்

வருவார்கள். இது நமது முதல் வெற்றி.

ஏற்கனவே தெலுங்கில் சக்கைப் போடு

போட்டு 2,000 கோடி வசூல் செய்த

'செப்புடு குப்புடு'ங்கிற படத்தின் கதைக்கும்

மற்றும் பாடல் மெட்டுகளுக்கும் பத்துக்

கோடி கொடுத்து உரிமயை வாங்கி

வச்சிருக்கிறேன். உன் முதல் படமே

வெள்ளி விழாப் படமா வசூல் வேட்டை

ஆடும்.
@@@@

ரொம்ப நன்றிங்க தாத்தா. நாளைக்கு

விழாவில் நான் என்ன

பேசணும்ங்கிறதை எழுதிக் குடுங்க

தாத்தா. உடல் மொழியையும் செஞ்சி

காட்டுங்க. நம்ம மாளிகையிலேயே

பலமுறை

பேசிப் பயிற்சி எடுக்கணும் தாத்தா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : அன்புவேல் (31-Aug-25, 7:07 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 36

மேலே