எந்நேரமும் நிலைப்பதில்லை
எவ்வளவு பணம் குவிந்திருந்தாலும் சரி
எவ்வளவு கல்வி நிறைந்திருந்தாலும் சரி
எவ்வளவு சுற்றம் சூழ நின்றிருந்தாலும் சரி
எவ்வளவு சுகங்கள் அமைந்திருந்தாலும் சரி
மகிழ்ச்சி எந்நேரமும் நிலைப்பதில்லை!
அன்றாடம் உடற்பயிற்ச்சி செய்திடினும் சரி
தினமும் தியான பயிற்ச்சி செய்யினும் சரி
உடல் ஆரோக்கியத்துடன் இருப்பினும் சரி
கோபம், பகை இல்லாமல் இருப்பினும சரி
மகிழ்ச்சி எந்நேரமும் நிலைப்பதில்லை!
நற்பண்புகளைக் கொண்டிருந்தாலும் சரி
பிறர் குறைகளை காணாதிருந்தாலும் சரி
ஏழைகளுக்கு உதவி செய்து வந்தாலும் சரி
பிறர்க்கு தீங்கு இழைக்காமலிருந்தாலும் சரி
மகிழ்ச்சி எந்நேரமும் நிலைப்பதில்லை!
கோயில் குளங்கள் சென்று வந்தாலும் சரி
பிராயச்சித்தங்கள் பலவும் செய்தாலும் சரி
பக்தி தழுவிய செய்திகளைக் கேட்டாலும் சரி
முக்தியைத் நாடி,தேடி முயற்ச்சித்தாலும் சரி
மகிழ்ச்சி எந்நேரமும் நிலைப்பதில்லை!
நம்மில் மனம் என்பது இருக்கின்ற வரையில்
நாம் இந்த பூவுலகில் இருக்கின்ற வரையில்
மனிதப் பிறவி என்று இருக்கின்ற வரையில்
கவலை எப்படி நிலைத்து நிற்பதில்லையோ
மகிழ்ச்சியும் எந்நேரமும் நிலைப்பதில்லை!
ஆனந்த ராம்