நோட்டு கொடுத்தால் ஒட்டு

இவ்வுலகில் உயிர் வாழ இன்றியமையாதது காற்று நீர் உணவு
வெயில் குளிர் கடுமையை குறைக்க மானம் காக்கவும் உடை
வெயில் குளிர் மழையிலிருந்து தப்பவும் பாதுகாப்புக்கும் வீடு
இயற்கை காற்று நீர் வேண்டுமானால் செலவின்றி கிடைக்கும்
உணவு, உடை, வீடு இம்மூன்றும் காசின்றி கிடைப்பது இல்லை
எனவே தான் காசு என்கிற மதிப்பு காகிதத்தை அச்சடிக்கிறோம்
ஆனால் இந்த காசு எல்லோருக்கும் சரிசமமாக கிடைப்பதில்லை
இதனால் சமுதாயத்தில் உயர்ந்தவர் நலிந்தவர் என்று பாகுபாடு
இந்த காகிதத்தை சேர்த்திட அடாடா ஒவ்வொருவரும் படும் பாடு
உணவை உண்டு போதும் போதும் என்கிற மனம்,காசை கண்டால்
இன்னும் கொடு இன்னும் கொடு என்று ஓயாமல் கெஞ்சி கேட்குதே
தெரிந்தோ தெரியாமலோ இந்த காசு உலகில் மாட்டி கொண்டோம்
காசு இன்னும் வேண்டும் என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்
எனவே இப்பூவுலகில், மன்னிக்க, இக்காசுலகில் காலம் கழிக்கிறோம்
காசு இன்றியமையாதது, சரி, ஆனால் மாசு படிவதை குறைக்கலாமே
காசு கொஞ்சம் குறைவாக அல்லது நிறைவாக இருப்பினும் அன்பை
குறையாமல் கொடுக்க முடியுமே, இரக்கம் நிறைய காட்ட முடியுமே
கருணை அன்பை காட்டினால் எவ்வளவு ஏழைகள் வயிறு நிறையும்!
அந்த நிறைவினில் நம் மனதில் திருப்தி மகிழ்ச்சி எவ்வளவு உயரும்!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Dec-21, 7:52 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 41

மேலே