வளைகாப்பு

தாய் மாமன் சீர்செய்ய
தாயவள் அணிந்து
அழகு பார்க்க...
வண்ண வளையல்களின்
உரசல் சத்தம்.....
உலகம் காணா உயிரின்
தாலாட்டு சங்கீதமாக எழ
துள்ளி விளையாடுகிறது
பூமியில் பாதம்
பதிக்கும் முன்னே.....

எழுதியவர் : பிந்துஜா ராஜா (20-Dec-21, 11:04 am)
சேர்த்தது : பிந்துஜா ராஜா
Tanglish : valakabbu
பார்வை : 57

மேலே