2022

மீண்டும் ஒரு வருடம் புதிதாக பிறக்கிறது ;
வீட்டில் நாட்காட்டி ஜனவரி காட்டுகிறது;
நடுங்கும் பனிக்காலம்; கடும் வெயில் காலம்;
பெரும் மழைக்காலம் காணப் போகிறோம்.
மேலும் வயது ஒன்று கூடிப் போனது....
மற்றபடி யாவும் நலமாகத்தான் இருக்கிறது.
இலக்குகள் ஏதுமில்லை; தினமும் வாழ்வோம்
மற்றவர்களையும் வாழ வைப்போம்.
எதிர்ப்புகளில் பணியாது துன்பத்தில் துவளாது
அன்பினில் மனங்கள் இணைந்து வாழ்வோம்
எடுத்தவை யாவிலும் வெற்றி காண்போம்.
பணம் வேண்டும் நல்ல மனம் வேண்டும்
ஒய்வு வேண்டாத உடல் வேண்டும்.
தளர்ச்சி காணாத உழைப்பு வேண்டும்.
மகிழ்ச்சி நம்மில் மட்டுமல்ல
நம்மைச் சுற்றிலும் யாவர்க்கும் வேண்டும்.
வளர்ச்சி ஒவ்வொரு நாளும் வேண்டும்.
காலா.. இங்கே வா ..உன்னை உதைக்கிறேன்
பாரதி மட்டுமா.....நாமும் சொல்வோம்.
எங்கள் திசையில் எட்டிக் கூட பார்க்காதே.

என் வீட்டில் எல்லாமே நலமாக வேண்டும்.
என் ஊரில் அனைத்துமே நலமாக வேண்டும்.
என் நாடு உலகின் தலைமையாக வேண்டும்.
என் உலகம் எங்கும் அமைதி மகிழ்ச்சி வேண்டும்

எழுதியவர் : காந்தி ராஜா (23-Dec-21, 9:18 pm)
சேர்த்தது : GANDHI RAJA
பார்வை : 72

மேலே