வாழ்க்கை ஓடையில் குளித்து களித்து மகிழ்ந்திடு
வாழ்க்கை என்பது நீளம் அகலம் ஆழம் தெரியாத ஒரு நீர் ஓடை
அதில் நீச்சலடிக்க தேவை மனஉறுதி என்னும் ஒரு சிறப்பு ஆடை
ஆழமான இடத்தில மூழ்காமல் இருக்க தைரியம் எனும் சீருடை
நீந்துகையில் வரும் எதிர்ப்புகள் சீர் போல, சீறாமல் அதை உடை
இடையிடையில் தெரியும் வெற்றி என்கின்ற ஒரு தீவின் மேடை
மமதை தாக்காமலிருக்க அமைத்திடு பணிவெனும் எடை மேடை
எடை மேடையில் அவ்வப்போது நின்று கவனி மமதையின் எடை
கோபம் வயிற்றெரிச்சல் புயல்கள் தாக்குகையில் போட்டிடு தடை
ஓடை பயணத்தில் நிச்சயம் கிடைத்திடும் ஆனந்தம் என்ற விடை
ஆனந்த ராம்