கணக்கு புரியல
கணக்கு புரியல
02 / 03 / 2025
கணக்கு பார்க்க எடுத்து வெச்சேன்
கணக்கு புரியல
வந்ததும் போனதும் வாழ்க்கையில்
எனக்கு தெரியல
எதார்த்தமா இருந்து பார்த்தேன்
ஏமாளின்னு சொல்லிப்புட்டாங்க
நிதானமா இருந்திட நெனச்சேன்
சுயநலவாதின்னு குத்திப்புட்டாங்க
மௌனமா இருந்து பார்த்தேன்
கல்லுளிமங்கன்னு கேலிசெஞ்சாங்க
உள்ளதை சொல்லிப் பார்த்தேன்
உளறுவாயன்னு ஒதுக்கிப்புட்டாங்க
உண்மையாய் இருந்து பார்த்தேன்
பெரிய புத்தன்னு ஒதுங்கிட்டாங்க
பொய்யனா சுற்றி வந்தேன்
போ தூரமான்னு ஓட்டிப்புட்டாங்க
கூட்டல் கணக்கு கழித்தல் ஆனது
பெருக்கல் கணக்கு வகுத்தல் ஆனது
ஆண்டவன் போட்ட கணக்கு எனக்கு
எக்குத்தப்பாய் சிலந்தி வலையானது
இந்நிலை என்னவென்று புரியவில்லை
என்நிலை என்னவென்றும் தெரியவில்லை
குழம்பினால்தான் தெளிவொன்று பிறக்கும்
குழம்பிய குட்டையில்தான் மீன்பிடிக்க முடியும்
தத்துவங்கள் நன்றாகத்தான் இருக்கிறது
குழம்பிய குட்டையில் முங்கி நானும்
என்னைநானே பிடிக்க முயலுகிறேன்
முயன்று கொண்டே இருக்கிறேன்..