மகிழ்ச்சி தந்த தருணங்கள்

என் பள்ளி வயதில் நான் நான்காம் வகுப்பு படிக்கையில் என் வகுப்பு வாத்தியாராக இருந்த திரு வேதபுரி எனக்கு வாழ்க்கையில் பிடித்து முதல் மனிதர். ஒன்பது வயதில் என்னை வகுப்பில் மாணவர்களுக்கு முன் நின்று பாட வைத்தவர். இதன் பிறகு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து தான் நான் பொது மக்கள் முன் நின்று பாடும் தைரியம் கொண்டேன்.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு வகுப்பாசிரியராக இருந்த மீனாட்சி சுந்தரம் என்பவரைப் போன்ற ஓரு இனிமையான நல்ல ஆசிரியரை நான் எங்கும் காணவில்லை. அவர் நம்மை அதட்டினால் கூட நம்மை வருடிக் கொடுப்பது போல இருக்கும்.
ஜான்ஸ் என்னும் ஊரில் நான் வேலையில் இருந்தபோது ராஜீவ் கேல்கர் என்பவர் கொடுத்து சிறப்பான ஊக்கத்தால் நான் முதல் முறையாக 300 பேர்கள் கொண்ட சபைக்கு முன் ஒரு சுதந்திர நாள் அன்று முதல் முறையாக பாடினேன். ஒரு தமிழ் ஒரு ஹிந்தி தேசபக்தி பாடல். நான் இப்போது கூட அவ்வப்போது பாடி வருகிறேன் என்றால் அது ராஜீவ் தந்த ஆக்கமும் உற்சாகமும் தான்.
ஹைதராபாத்தில் 30 வருடங்கள் பணி புரிந்து ஓய்வு பெற்ற நான் என் கம்பெனியின் டிரெய்னிங் பள்ளியில் ஒரு பயிற்சியாளராக ஒரு ஆசிரியராக இருந்து அவ்வப்போது சக ஊழியர்களுக்கு ஊக்கம் கொடுத்தது என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சி தந்த கட்டம் . பின்னர் வருடம் ஒரு முறை விஜிலென்ஸ் துறைக்காக குவிஸ் மாஸ்டராக தொடர்ந்து ஐந்து வருடங்கள் இருந்தது எனக்கு மிகுந்த திருப்தி மற்றும் சந்தோஷம் அளித்த விஷயம் .
என் ஆங்கில கவிதை போன்ற படைப்புகளை எங்கள் நிர்வாக இயக்குநர் ரசித்து படித்தது இன்னுமொரு மகிழ்ச்சி அளித்த நேரமாகும்.
பத்து வருடங்களாய் சிறிது சிறிதாக
முதலீடு செய்து சேமித்து வைத்த தொகையை என் உறவினர் ஒருவருக்கு தக்க நேரத்தில் தந்து உதவியது மற்றுமொரு திருப்தி தந்த செயலாகும்.

ஒவ்வொரு வருடமும் அகில உலக பெண்கள் தினத்தில் நான் ஆங்கிலத்தில் எழுத்து/ வாழ்த்த மடல் ஒன்றை தவறாமல் அளித்து வருகிறேன். நேற்றைய முன் தினம் கொண்டாடப் பட்ட "மகளிர் தினம்" அன்று, தமிழ் மொழியிலும் இதைப் போல மடல் எழுதி சிலருடன் பகிர்ந்து கொண்டேன். எழுது. காம் தளத்தில் கட்டுரை பகுதியில் இதை நான் வெளியிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

எங்களது சில உடன் பிறப்புக்குகளுக்கும் ஏழைகள் சிலருக்கும் அவ்வப்போது பணம் பொருள் தந்து உதவி வந்தது/ வருவது எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் ஒரு மனநிறைவை தரும் விஷயமாகும். பிறரைக் கெடுப்பது என்பதை என்னால் கனவிலும் நினைக்க முடியாது. பிறருக்கு கொடுப்பது என்ற என் எண்ணத்தை என் கனவிலும் மாற்ற இயலாது.

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (10-Mar-22, 12:14 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 67

மேலே