யோசிப்போம் உணர்ந்து நடப்போம்
ஆதி மனிதனுக்கு
வாழ்க்கையே பயிற்சியானது;
எழுந்து உட்கார்ந்து ,
நடந்து பேச
நேரமில்லை.
ஓடிக்கொண்டே இருந்தான்.
இரைக்காக ;
தன்னையும் ;
தன் இனத்தையும் ;
காக்க ....
அதுவே அவனுக்கு
யோகம் ஆனது.
மூச்சுக்கு பயிற்சி
அவன் கொடுத்தான்.
மனம் சுத்தமானது;
எதையும் ஏற்றுக் கொண்டது .
திரும்பிப் பார்க்க நேரமில்லை ,
காலத்தை கடந்து அவன்,
பயணம் தொடர்ந்தது.
கால ஓட்டத்தில் ,
கலாச்சார வெளியில்,
மாற்றம் காணத்
தொடங்கினான்.
எல்லாம் வந்தது !
எதற்கு வந்தது ?
ஏன் வந்தது ?
எப்போது போகும் ?
என்கிற நிலையில் !
வளர்ச்சி ! வளர்ச்சி !!வளர்ச்சி !!!
கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.
Consumerism is a devil ,
Materialism is an evil ,
Spiritualism is a weapon.

