சின்ன தம்பி பெரிய அம்பி
சிறு வயதில் படாத பாடு பட்டு, கேட்டேன் சினிமா பாட்டு
பெரிய வயதில் நான் பாடுவதை கேட்டு, ஓடுகிறாரே இருக்கையை விட்டு!
ஏழாம் வகுப்பில் ஒரு முறை வாங்கினேன் மதிப்பெண் இரண்டு
நல்ல வேளை, நான் சைவம் என்பதால், கிடைக்கவில்லை முட்டை ஒன்று!
நான் சின்ன பையனாக இருந்தபோது, என் பாட்டி செய்தார், ஜாங்கிரி
ரகசியமாக அதை ருசிக்கப் போனேன், விழுந்தேன் வழுக்கி வாரி!
பள்ளியில் படிக்கையில் நான் ஆடவில்லை ஒருபோதும் விளையாட்டு
இப்போது தெரிகிறது வாழ்க்கையே ஒரு விளையாட்டு!