இருந்து இருந்து ஒரு நாள்

லக்னோ ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. அன்று மாலை ரயில்வே நிலையத்திலிருந்து 3 கிமீ தூரத்தில் சரக்கு வண்டி ஒன்று தடம் புரண்டதால், பல ரயில்கள் லக்னோ ரயில்வே பிள்டபோர்ம்க்கு வரமுடியாமல் காத்துக்கொண்டிருந்தன. இரவில் ஹரித்வார்க்கு செல்லும் ரயில் புறப்படுவது மூன்று மணிநேரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. அதாவது இரவு 9 மணிக்கு ஹரித்வார் புறப்படிய வேண்டிய ரயில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படக்கூடும் என்று அறிவிப்பு வந்தது. தன்னுடைய 8 வயது பிள்ளை மற்றும் 5 வயது மகளுடன் லக்னோ ரயில் நிலையத்தில் காத்துக்கொக்ண்டிருந்த ராஜஸ்ரீ மிகவும் கவலை அடைந்தாள். அவளுடைய கணவன் சேகர் அவர்களை ரயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டு அலுவலக வேலையாய் லக்னோ விமானநிலையம் சென்று விட்டார். அங்கிருந்து அவர் இரவு 10 மணிக்கு புறப்படும் மும்பை விமானத்தில் செல்ல வேண்டும்.ராஜஸ்ரீ கேந்திரிய வித்யா பள்ளியில் ஒரு உயர்நிலை பள்ளி ஆசிரியை. அவளுக்கு 2 வருடங்களுக்கு ஹரித்வார் கேந்திரிய வித்யாலயா கிளையில் பணி புரிய அலுவலக ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஹரித்துவாரில் அவளுக்கு அரசாங்க விருந்தினர் விடுதியில் ஒரு வாரத்திற்கு தங்க ஏற்படும் செய்யப்பட்டு இருந்தது. ஸ்டேஷனில் நிறைய பிரயாணிகள் அவளை போல் காத்துக்கொண்டிருந்ததால் ராஜஸ்ரீக்கு பயம் இல்லாமல் இருந்தது. அப்போது இரவு 9 மணி. இன்னும் 3 மணிநேரம் அவள் குழந்தைகளுடன் காத்திருக்க வேண்டும்.

அப்போது அங்கே வந்து சேர்ந்த இளைஞன் ஒருவன் அவளிடம் ஆங்கிலத்தில் " அம்மணியே, ஹரித்துவார் செல்லும் வண்டி வருமா அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டான். இல்லை. இரவு 12 மணிக்கு புறப்படும் என்று கொஞ்ச நேரம் முன் தான் அறிவிப்பு வந்தது என்றாள் ராஜஸ்ரீ.
அந்த இளைஞன் கேட்டான் " நீங்களும் ஹரித்துவார் சொல்லவேண்டுமா?". ஆமாம் என்றாள் ராஜஸ்ரீ.
இருவருக்குமே ஒருவருக்கு ஒருவர் பேச துணை கிடைத்தார்கள் என்ற சந்தோஷம். குழந்தைகள் இருவரும் அங்கு உள்ள ஒரு பெஞ்சில் படுத்து தூங்கிவிட்டார்கள்.

கொஞ்ச நேரம் சென்ற பின் இருவரும் மீண்டும் பேச ஆரம்பித்தார்கள். இளைஞன் தன் பெயர் அரவிந்த் என்றும் ஹரித்துவாரில் ஒரு பொது துறை நிறுவனத்தால் வேலை செய்வதாகவும் , அலுவலக வேலையாக லக்னோ வந்துவிட்டு மீண்டும் ஹரித்துவார் திரும்பிக்கொண்டிருப்பதாகவும் கூறினான். என்ன ஆச்சரியம்! ராஜஸ்ரீ சேரப்போகும் கேந்திரிய வித்யாலயா பள்ளியும் அதே நிர்வாகத்தின் குடியிருப்பு பகுதியில் இருந்தது. இதனால் இருவருக்கும் கொஞ்சம் பரிச்சயம் கூடவே ஏற்பட்டது. ராஜஸ்ரீக்கு எந்த ஒரு உதவியானாலும் தன்னிடம் கேட்குமாறு அரவிந்த் கூறினான்.ராஜஸ்ரீ அதற்கு நன்றி தெரிவித்தாள்.
ராஜஸ்ரீ நல்ல அழகு. வளமான உடல் கட்டு. இதை கவனித்து அரவிந்த் கொஞ்சம் மயங்கியே விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். இருவரும் தேநீர் வாங்கி அருந்தினர். இரவு 12 மணி அளவில் ஹரித்துவார் ரயில் பிள்டபோர்ம் வந்தது. ராஜஸ்ரீ குழந்தைகளுடன் அவள் குளுகுளு பெட்டியில் ஏறிக்கொண்டாள். அவள் பெட்டிகளை உள்ளே எடுத்து செல்ல சேகர் உதவினான். ஹரித்தவாரி ரயில் நிலையத்தில் சந்திப்பதாக சொல்லிவிட்டு அரவிந்த் அவனுடைய பெட்டிக்கு சென்றுவிட்டான்.

அடுத்த நாள் மதியம் ஒரு மணி அளவில் ரயில் ஹரித்துவார் சென்றடைந்தது. அரவிந்த் வெகு வேகமாக இறங்கி ராஜஸ்ரீ பயணித்த குளுகுளு பெட்டிக்குள்ளே சென்று ராஜஸ்ரீக்கு காலை மதிய வணக்கங்கள் சொல்லிவிட்டு அவளது குழந்தைகளுக்கும் ஹலோ சொல்லிவிட்டு தன்னுடைய சின்ன பெட்டியை ராஜஸ்ரீயிடம் கொடுத்து " நீங்கள் இதை எடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் கீழே இறங்குங்கள். நான் உங்கள் பெட்டிகளை எடுத்து வருகிறேன்" என்றான். ஏற்கெனவே மதியம் ஒருமணிக்கு மேல் ஆகி விட்டதால் " நாம் இப்போது உணவு அருந்தி விட்டு செல்வது தான் நலம் என நினைக்கிறன்" என்றான். ராஜஸ்ரீ குழந்தைகளும் " அம்மா எங்களுக்கு பசியாக இருக்கிறது. சாப்பிட்டு பின்பு போகலாம்" என்றனர். அரவிந்த் சொன்னான் " இங்கே ரயில்வே நிலையத்தில் நல்ல உணவு எதுவும் கிடைக்காது. ஒரு கிமீ தூரத்தில் நல்ல ஹோட்டல்கள் இருக்கின்றன. எனவே இங்கிருந்து ஆட்டோ வைத்துக்கொண்டு செல்லலாம் என்று சொல்லிவிட்டு, இரண்டு ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து " இந்த பெண்மணி மற்றும் குழந்தைகளை ஒரு ஆட்டோவில் ஏற்றி கொண்டு ஹோட்டல் கங்காவில் இறக்கி விடுங்கள். இன்னொரு ஆட்டோவில் நான் மற்ற சாமான்களை எடுத்து வருகிறேன்" என்று சொல்ல அதை போல இரு ஆட்டோவும் ஒரே நேரத்தில் ஹோட்டல் கங்கா சேர்ந்தது. ராஜஸ்ரீ இருவரின் ஆட்டோவுக்கும் கட்டணம் கொடுத்தாள். அரவிந்த் " இந்தாங்க " என்று 50 ரூபாயை கொடுத்தான். ராஜஸ்ரீ "இவ்வளவு உதவி செய்துகொண்டிருக்கிறீர்கள். நான் இந்த சின்ன தொகையை கொடுப்பது ஒன்றுமே இல்லை" என்றாள். அரவிந்தனுக்கு ஏற்கெனவே தெரிந்த ஹோட்டல் என்பதால் அங்கே உள்ள பணியாளர்கள் அவர்களது சாமான்களை எடுத்து உள்ளே பாதுகாப்பாக வைத்தார்கள். பின்னர் அனைவரும் உணவு அருந்தினார்கள். இம்முறை ராஜஸ்ரீயை முந்திக்கொண்டு அரவிந்த் பணம் கொடுத்து விட்டான். ராஜஸ்ரீ புன்முறுவல் பூத்தாள். அதன் பிறகு அரவிந்த் ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து அவர்களுடன் சென்று அவர்களை அரசாங்க விருந்தினர் விடுதியில் சேர்த்தான். ராஜஸ்ரீ அவனிடம் நன்றி தெரிவித்து அரவிந்தின் போன் நம்பரை வாங்கிகொண்டாள்.நான் பிறகு நிச்சயம் போன் செய்கிறேன் என்றாள். அரவிந்த் அவனது இருப்பிடத்திற்கு சென்று விட்டான்.

நான்கு நாட்கள் கழித்து அவனுக்கு ராஜஸ்ரீயின் போன் கால் வந்தது. " உங்கள் குரலை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றான் அரவிந்த். ராஜஸ்ரீ "எனக்கும் அப்படித்தான் .உங்களது குடியிருப்பு வளாகத்தில் எனக்கு குழந்தைகளுடன் தங்க ஒரு குவார்ட்டர் கொடுத்திருக்கிறார்கள்" என்றாள். அரவிந்த் " குவார்ட்டர் நம்பர் என்ன என்று கேட்டான். " 143 சி" என்றாள். இதை கேட்டதும் அரவிந்த் மகிழ்ச்சியில் திளைத்து " 143 சி " தானா என இன்னொரு முறை ஊர்ஜிதப்படுத்துங்கள் என்றான். ஆமாம் " 143 சி" ஏ தான் என்றாள் ராஜஸ்ரீ. அரவிந்த் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து " உங்களுக்கு பக்கத்துக்கு குவார்ட்டர் 144A இல் தான் நான் தங்கி இருக்கிறேன்"என்றான். " ஓ, அப்படியா எவ்வளவு அற்புதம். இதை என் அதிர்ஷ்டமாக நினைக்கிறன்" என்றாள் ராஜஸ்ரீ.

அடுத்த இரண்டு நாட்களில் ராஜஸ்ரீ புதிய குவாட்டருக்கு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தாள். பக்கத்து குவார்ட்டர் என்பதால், அரவிந்த் அவளுக்கு எல்லா உதவிகளையும் செய்தான். " இன்னும் இரண்டு நாட்களில் எனது கணவர் சாமான்களுடன் லாரியில் வருகிறார்" என்றாள் ராஜஸ்ரீ. இரண்டு நாளுக்கு பின் ராஜஸ்ரீ கணவர் சேகர் ஏனைய வீட்டு சாமான்களுடன் வந்து இறங்கினர். ராஜஸ்ரீ அரவிந்தை அவருக்கு பரிச்சயம் செய்து வைத்தாள். அவர் மூன்று நாட்கள் தங்கி விட்டு மீண்டும் லக்னோ திரும்பி விட்டார்.

ராஜஸ்ரீ பிள்ளைகளும் அவள் வேலை பார்க்கும் கேந்திரிய வித்யாவில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சேகர் வந்து சென்ற பிறகு ராஜஸ்ரீ அரவிந்திடம் அதிகம் பேசுவதில்லை. அவ்வப்போது வெளியில் பார்க்கும்போது சில நிமிடங்கள் இருவரும் பேசி கொள்வார்கள். அரவிந்த் ஒண்டி கட்டை என்பதால் அவன் நினைத்த மாதிரி ராஜஸ்ரீ வீட்டுக்கு செல்ல முடியவில்லை. ஆனால் அவ்வப்போது ராஜஸ்ரீ அவனிடம் சில உதவிகள் செய்து தருமாறு கேட்பாள். அரவிந்த அதை செய்து கொடுப்பான். இப்படியாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. சேகர் மாதத்தில் ஒரு முறை மூன்று நாட்களுக்கு வந்து சென்றார்.

ஒருமுறை சேகர் வந்து சென்ற அடுத்த நாள் ராஜஸ்ரீயின் பையனுக்கு காய்ச்சல் அதிகமாகவே ராஜஸ்ரீ அரவிந்தை அழைத்து " என் பையனுக்கு நல்ல காய்ச்சல். கொஞ்சம் ஹாஸ்பிடல் வரை வர முடியுமா."என்றாள். அரவிந்த் " உங்களுக்கு சேவை புரியாத்தானே நான்" என சொல்லிவிட்டு அவனுடைய மோட்டார் பைக்கில் அவர்கள் இருவரையும் கம்பெனி ஹொஸ்பிடலுக்கு கூட்டி சென்றான். பையனுக்கு ஒரு இன்ஜெக்ஷன் கொடுத்து மருந்துகள் வாங்கிக்கொண்டு மீண்டும் அவர்களை வீட்டில் சேர்த்தான். ராஜஸ்ரீ " எனக்காக இரண்டு மணி நேரம் நீங்கள் கொடுத்தீர்கள். வீட்டிற்குள் வந்து கொஞ்சம் தேநீர் குடித்து செல்லுங்கள்"என்றாள். எப்போதுடா அவகாசம் கிடைக்கும் என்று இருந்த அரவிந்த் " ஆஹா, எனக்கு மிக்க மகிழ்ச்சியே" என்று அவள் வீட்டிற்கு சென்றான்.வீட்டை மிகவும் அழகாக சுத்தமாக ராஜஸ்ரீ வைத்திருப்பதை கண்டு " எவ்வளவு நன்றாக வீட்டை வைத்திருக்கிறீர்கள்.சேகர் கொடுத்து வைத்தவர்" என்றான். ராஜஸ்ரீ சிரித்துவிட்டு " ஏன், உங்களுக்கு வர போகிறவளும் அப்படி இருக்கலாமே" என்றாள். பின்னர் அவளே செய்த சில ருசியான தின்பண்டங்கள் கொடுத்துவிட்டு பின்னர் சூடாக இஞ்சி போட்ட தேநீர் கொடுத்தாள். " நல்ல சுவையான தின்பண்டங்கள் , அருமையான தேநீர். இன்று எனக்கு கொடுத்து வாய்த்த நாள் என்றான். " இல்லை எனக்குதான் என்றாள் ராஜஸ்ரீ. அதே வார இறுதியில் சேகர் வந்தார். இம்முறை ஒருவாரம் இருந்துவிட்டு சென்றார். அந்த ஞாயிற்று கிழமை சேகர் அரவிந்தனுக்கு போன் செய்து அவனை சாப்பிட வீட்டுக்கு அழைத்தார். அன்றைய பகல் உணவு அரவிந்தனுக்கு பெரிய விருந்தாக இருந்தது. சாப்பிட்டபின் சிறுது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு அரவிந்த் அவன் குவார்ட்டர் திரும்பினான்.

ஒரு முறை ராஜஸ்ரீ கேட்டதன் பேரில் அவன் ஹரித்துவார் டவுன் சென்றபோது அவளுக்கு சில புத்தகங்களை வாங்கி வந்தான். வரும் வழியில் நல்ல மழை. வீடு வரும்போது மழை விட்டுவிட்டது. நன்கு இருட்டாகிவிட்டது என்பதால் புத்தகங்களை கையுடன் கொடுத்துவிட்டு சென்று விடலாம் என்று அரவிந்த் ராஜஸ்ரீ வீட்டுக்கு செல்ல மாடியில் ஏற தொடங்கினான். அப்போது அங்கே மின்சாரம் இல்லை என்பதால் ஒரே இருட்டு. அந்நேரத்தில் கொஞ்சமும் எதிர் பார்க்காமல் மாடியிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்த ராஜஸ்ரீ மழை தண்ணீர் வழுக்கி விட, தடுமாறி கீழே விழ தொடங்கினாள். சரியாக அவள் அரவிந்தின் மார்பில் சாய்ந்தாள். அரவிந்துக்கும் அதிர்ச்சி. ராஜஸ்ரீ அவன் மேல் சரிந்தவுடன் அதன் விளைவால் தானும் கீழே தடுக்கி விழக்கூடாது என்று அவளை கெட்டியாக கட்டி பிடித்து இறுக்கி அணைத்துக்கொண்டான். " ஓ, சாரி , நீங்களா" என்றாள் ராஜஸ்ரீ. அவளை அப்படியே தாங்கிய வண்ணம் அரவிந்த் " பரவாயில்லை. இருவருமே கீழே விழாமல் இருந்தோம்" என்றான். அந்த 10 வினாடிகள் ராஜஸ்ரீயின் சரீரம் பட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தான் அரவிந்த். அவளே தன் காதலியாக இருந்திருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும் என்பதை அந்த கணத்திலும் கற்பனை செய்து பார்த்தான் அரவிந்த். " கீழே வைத்துள்ள என் லுனாவை பூட்டாமல் வந்து விட்டேன். அதை பூட்டதான் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தேன்" என்றாள் ராஜஸ்ரீ. அரவிந்தை பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டுள்ள ராஜஸ்ரீ கூட அந்த ஒரு கணம் தன்னை மறந்து விட்டாள். அதன் பின் அவளிடம் புத்தகங்களை கொடுத்துவிட்டு அரவிந்த் திரும்பினான். இரவில் ஒரு இன்ப கனவு. யாருக்கு? ராஜஸ்ரீக்கு.

ராஜஸ்ரீக்கு அவள் பள்ளிக்கூடம் ஒரு கிமீ தூரம்தான் என்பதால் அவள் பிள்ளைகளுடன் பள்ளி சென்று வருவதும் சுலபமாக இருந்தது. சிறந்த ஆசிரியை என்ற பெயரும் ராஜஸ்ரீக்கு கிடைத்தது. இரு பிள்ளைகளும் நன்றாக படித்து வந்தார்கள். அவள் பயனுக்கு மட்டும் ஒருவிதமான காய்ச்சல் வந்து போய்க்கொண்டு இருந்தது. அவனை பரிசோதித்த இரண்டு மருத்துவர்கள் அவர்கள் இருக்கும் குடியிருப்பில் வளரும் சில தாவரங்களினால் தான் அவனக்கு ஒவ்வாமை அதனால் காய்ச்சல் மற்றும் உடல் அயர்ச்சி , கண்ணில் நீர் கசிவு இவை எல்லாம் வந்து போகிறது கூறினார்கள். இதனால் ராஜஸ்ரீ வாரம் ஒரு முறை 8 கிமீ தூரத்தில் உள்ள ஒரு ஹோமியோ மருத்துவமனையில் அவனை கூடி சென்று மருந்து வாங்கி வந்தாள். ஒருமுறை சேகர் கூட்டி செல்வார். ஒரு முறை அவள் பையனை அழைத்து கொண்டு தனியே சென்று வருவாள். இன்னும் இரண்டு முறை அரவிந்த் அவர்களை கூட்டி செல்வான். தானே சென்று வருவதாக பலமுறை ராஜஸ்ரீ கூறியும் அரவிந்த் விடாப்பிடியாக தான் தனியாக இருப்பதனால் அவனுக்கு இதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிட்டு அந்த உதவியினை செய்த வண்ணம் இருந்தான்.

இருவரும் மனத்தால் ஒருவரை ஒருவர் விரும்பி வந்தனர். ஆனால் இருவரும் இது பற்றி மௌனம் சாதித்து வந்தனர். அரவிந்த் நன்கு அறிவான் ராஜஸ்ரீ இரு பிள்ளைகளுக்கு தாய் மற்றும் அவளது கணவன் அலுவல் காரணமாகவே லக்னோவில் இருக்கிறார் என்று. ராஜஸ்ரீ அவள் கணவன் மீது மிகுந்த பற்றும் வைத்திருந்தாள். தினமும் இருமுறை அவருடன் பேசுவாள். இரவில் படுக்கும் முன் நிச்சயமாக இருவரும் பேசுவார்கள். ராஜஸ்ரீ நன்கு அறிவாள், அவள் அரவிந்தை காட்டிலும் 8 வயது மூத்தவள் என்று.
அவனை வேறு விதமாக நினைப்பது தவறு என்றே அவள் நினைத்தாள். ஆனால் அரவிந்த் அவளுக்கு செய்து வந்து உதவிகளின் காரணமாகவும் அவனுடைய நகைச்சுவையை அவள் மிகவும் ரசிப்பதினாலும் அவளுக்கு தெரியாமலே அவன் மேல் அவளுக்கு ஒரு சொல்லமுடியாத பற்று ஏற்பட்டது. அது என்ன நட்பா, காதலா, பாசமா அல்லது பிணைப்பா? அந்த நாள், மாடியிலிருந்து கீழே இறங்குகையில் அவன் மார்பில் சாய்ந்து அவன் அவளை கட்டி கொண்டது, அன்று இரவு அவள் கண்ட இன்ப கனவு இவை எல்லாம் மீண்டும் மீண்டும் அவள் மனதை தாக்கியது. கடவுள் பற்று அதிகம் உள்ளவள் மற்றும் கணவன் மீது மிகுந்த அன்பு கொண்டவள் என்பதால் அவள் இந்த விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருந்தாள். அரவிந்த் ஒரு நல்ல நண்பனே தவிர வேறு எதுவும் இல்லை என்று தன்னை தானே தேற்றி கொண்டாள்.
அரவிந்துக்கும் ராஜஸ்ரீயுடன் இருக்க வேண்டும் அவளிடம் அதிகம் பேச வேண்டும், வாய்ப்பு கிடைத்தால் அவளை அனுபவிக்க வேண்டும் போன்ற பொல்லாத ஆசைகள் சில சமயம் அவன் மனதில் அலை மோதின. ஆனால் அவன் தான் ஒரு ஜென்டில்மேன் மாதிரி தான் அவளிடம் நடந்து கொள்ளவேண்டும் என்று திடமாக இருந்தான். இந்த இருவரின் இதுபோன்ற வைராகியத்தால் இருவரும் கவனமாக தள்ளியே இருந்து வந்தார்கள்.

விதி யாரை விட்டது?ஒரு முறை ராஜஸ்ரீ குழந்தைகள் டெல்லி நகருக்கு அவர்கள் பள்ளி மாணவ மாணவியருடன் பள்ளி மூலம் இரண்டு நாட்கள் சுற்றுலா சென்றனர். குழந்தைகள் இல்லாமல் ராஜஸ்ரீக்கு மிகவும் வெறுமையாக இருந்தது. மாலையிலிருந்தே மனது பிடி கொள்ளாமல் இருந்தது. எப்படியோ ஒரு வழியாக இரவு உணவுவரை நேரத்தை இழுத்து பிடித்து கடத்தி விட்டாள். உணவு கூட அவளுக்கு சரியாக இறங்கவில்லை. ஆனால் அவள் உள்மனதில் ஒரு எண்ணம் மின்னல் போல் உதித்தது. இன்று தனிமையில் தானே உறங்க வேண்டும். இன்று ஒரு இரவுக்கு அரவிந்தை என்னுடன் தங்கியிருக்க அழைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தாள். அரவிந்தை தனியாக படுக்க சொல்லிவிட்டு தான் தனியாக படுத்துக்கொள்ளலாம் என்று ஒரு நினைப்பு வந்தது. அதே நேரத்தில் அவனும் அவளும் சேர்ந்து ஒரே படுக்கையில் படுத்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்று நினைக்கையில் அவளுக்கு ஒரு பட படப்பும் கூடவே ஒரு கிளு கிளுப்பும் ஏற்பட்டது. ஓரிரு நிமிடங்கள் போராடினாள் அவள் மனசாட்சியுடன். கடவுளை நினைத்து கொண்டாள். அவள் அன்பு கணவரை நினைத்துக்கொண்டாள். அந்த சிறு பூகம்பம் போன்ற மன போராட்டத்தில் அவளது உடல் பசி ராஜஸ்ரீயை வென்றது. பாதியிலேயே உணவை நிறுத்தினாள். அவளை நன்கு அலங்காரம் செய்து கொண்டாள். ஆசையின் உந்துதலால் புடவையை மாற்றி விட்டு உடம்பு தெரிகின்ற எடுப்பான நைட்டியை போட்டு கொண்டாள். அரவிந்த் இப்போது என்னை பார்த்தால் மனதில் என்ன நினைப்பான், எப்படி என்னை பார்ப்பான், அவன் என் அருகினில் வந்தால் நான் என்ன செய்வேன், இப்படி பட்ட விபரீத எண்ணங்கள் அவள் மனதில் துள்ளி துள்ளி அலை பாய்ந்தது. இரவு மணி 9 ஆகிவிட்டது. இன்று ஒரே ஒரு நாள் மட்டும் அரவிந்தை தன்னுடன் தங்க சொல்ல வேண்டும். அவனும் நிச்சயம் இதற்கு சம்மதிப்பான் என்று எண்ணியபடி, தன் வாளிப்பான உடல் அழகை கண்ணாடியில் பார்த்தாள். எது நடப்பினும் பரவாயில்லை. இன்று ஒரே ஒரு நாள் அரவிந்திடம் என்னை கொடுத்துவிடுவேன் என்று நினைக்கையில் அவள் உடல் கொதித்தது , இருதயம் படபடத்தது. போனை எடுத்து அரவிந்தை உடனே வரச்சொல்லவேண்டும் என்று உறுதியாக நினைத்து அவள் கைகள் போன் செய்யும் அதே நேரத்தில் சேகரின் போன் வருவதற்கும் சரியாக இருந்தது. "ஓ, இது எனக்கு ஞாபகமே இல்லையே. வழக்கமாக சேகர் எனக்கு இரவில் செய்யும் போன் கால் தான். அவருடன் பேசிவிட்டு அரவிந்தை கூப்பிடலாம் என்று நினைத்தவளுக்கு ஆச்சரியம் அல்லது அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. சேகர் " நான் ஹரித்துவார் வந்து விட்டேன் . இன்னும் அரை மணியில் வீட்டில் இருப்பேன். பிள்ளைகள் இல்லாமல் நீ தனியாக இருப்பாய் என்று தோன்றி இன்று காலை தான் அலுவலகத்திற்கு மெசேஜ் வைத்துவிட்டு புறப்பட்டுவிட்டேன். உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கத்தான் என்றார்."

ராஜஸ்ரீக்கு பக்கென்று இருந்தது. சரியான நேரத்தில் கடவுள் மற்றும் அவள் அன்பு கணவரும் அவளின் கண்ணை திறந்து வைத்தார்கள் என்று. சேகர் போன் வர ஒரு செகண்ட் தாமதமாயிருந்தாலும் அவள் அரவிந்துக்கு போன் செய்திருப்பாள். கடவுளே, என்ன காரியம் செய்ய இருந்தேன்! சேகர் வந்தார். சாப்பிட்டார். இரவில் இன்பமும் தந்தார். ஆனால் ராஜஸ்ரீக்கு எப்போதும்போல உள்ள ஈடுபாடு இல்லாமல் இருந்தது. சேகரும் இதை புரிந்து கொண்டார். ராஜஸ்ரீ மனம் அதிர்ச்சியால் மிகவும் களைத்துவிட்டது.
அடுத்த நாள் காலையில் அவள் சேகரிடம் சொன்னாள் " இங்கு இருக்கும் சில தாவரங்களால் நம் மகனுக்கு அடிக்கடி ஒவ்வாமையால் உடம்புக்கு வந்து படுத்துகிறது. நானும் இங்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. நீங்கள் ஒரு சரியான விண்ணப்பம் எங்கள் பள்ளி நிர்வாகத்துக்கு எழுதி என்னை மீண்டும் லக்னோக்கு மாற்றம் செய்ய உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள். எனக்கும் இங்கு இருக்க மனம் கொள்ளவில்லை"

சேகர் இதை எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை இவ்வளவு நாட்கள் மனதில் வைத்திருந்து இன்று மனதை திறந்து கொட்டிவிட்டாள் போலிருக்கிறது என்று நினைத்தார். அதன் பிறகு எல்லாமே ராஜஸ்ரீக்கு நன்மை தருவதாகவே அமைந்தது. 10 நாட்களுக்கு பிறகு அரவிந்த் ராஜஸ்ரீக்கு போன் செய்து " என் கல்யாணம் நிச்சயம் ஆகி விட்டது. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து திருமணம், கோயம்புத்தூரில்." ராஜஸ்ரீ " என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அரவிந்த். எனக்கும் அடுத்த இரண்டு மாதங்களில் லக்னோக்கு மாற்றம் தந்து அலுவலக ஆணை வந்து விட்டது. நம் இருவருக்குமே எல்லாமே நல்லபடியாக நடக்கிறது." என்றாள். அரவிந்த் சொன்னான் " நானும் இதைத்தான் சொல்ல வந்தேன்"

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Oct-21, 8:53 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 260

மேலே