முரளி - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : முரளி |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 01-Jun-1951 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 3093 |
புள்ளி | : 1974 |
என் எழுத்துக்கள் என்னைச் சுற்றியே, என் பார்வைகளில் பட்டதும், என் எண்ணச் சுழற்சியில் மலர்ந்ததும், அதீத கற்பனையும், மேல் புச்சும் அற்றதாகவே இருக்கும்...
For those who can spare time please visit my blog space muralitn.wordpress.com
ஹீரோ ஏழை...
சின்ன வயசுல படிக்க வசதியில்ல...
ஹீரோயின் பெரிய படிப்பு படிச்ச வசதியானவங்க..
காதல்னு வந்துட்டா இதெல்லாம் பொருட்டே இல்ல...
ஹீரோ முடிவெடுக்கறார்... நாமளும் அவங்க அளவு உயர்ந்த பின்தான் காதலை சொல்வதென்று.
உடனே சட்டக் கல்லூரில சேர்ந்து இன்ஞினியராவுதுன்னு முடிவு பண்ணிடறார்... அப்பிடியே சைடுக்கா வெளிநாடு சென்று ஆராய்ச்சி செய்து டாக்ட்ரேட் வாங்கிடறார்.
"அல்லாத்தையும் ஒரே சாங்குல சொல்றோம்...."
"அண்ணே ஒரு சஜ்ஜசன்.. "
"சொல்லு..."
"வெளிநாடு போவதால நல்ல லொகேசன்ல ஒரு டுயட்..."
"ஒன் ஆசைய ஏன் கெடுக்கணும் கனவு சீனா வச்சிடுவோம்....."
"நன்றிணே..!"
-----முரளி
நடு நிசி.
கும்மிருட்டு...
வானத்தில் சில நட்சத்திரங்கள் மட்டும் கண் சிமிட்டின...
நிலவுக்கு அன்று ஓய்வு.
மரங்களும் செடிகளும் துளியும் அசையவில்லை...
எல்லா உயிரினங்களும் உறக்கத்தில்..
குறட்டை சத்தம் கூட இல்லை..
கொசுக்களும் ரீங்கரிக்காமல் அமைதி விரும்பினர்...
அமைதி, பேரமைதி, நிசப்தம்...
எங்கும் ஒரு துளி சத்தம் இல்லை...
உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்த அந்த முதியவர் காது கேட்கும் கருவியை அணிந்து கொண்டார்...
அமைதி, பேரமைதி, நிசப்தம்...
எங்கும் ஒரு துளி சத்தம் இல்லை...
-----முரளி
அவன் மிகவும் பலவீனமாக படுக்கையில் புரண்டு படுத்தான். அருகில் உள்ள மேஜைமேல் அந்த பாட்டிலில் ஒருவாயே இருந்தது. அவன் திருட்டுத்தனமாக சேமித்து வைத்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்து விட்டிருந்தது. யாரைக் கேட்டாலும் தரமாட்டார்கள், கிடைக்காது, இருக்காது. அவன் செல்ல நாய் அவனைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. தொங்கிக் கொண்டிருந்த அதன் நாவில் இருந்து ஒரு சொட்டு உமிழ்நீர் தரையில் விழுந்து உடனே ஆவியாகிக் கரைந்தது...
அவன் ஏக்கத்துடன் பாட்டிலைப் பார்த்தான். அந்தக் கடைசி வாயையும் குடித்து விட்டால் தமிழகத்தில் எந்த மூலையிலும் ஒரு சொட்டும் கிடைக்காது என நினைக்கையில் அவனை அறியாமல் அவன் உடல்
அவன் மிகவும் பலவீனமாக படுக்கையில் புரண்டு படுத்தான். அருகில் உள்ள மேஜைமேல் அந்த பாட்டிலில் ஒருவாயே இருந்தது. அவன் திருட்டுத்தனமாக சேமித்து வைத்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்து விட்டிருந்தது. யாரைக் கேட்டாலும் தரமாட்டார்கள், கிடைக்காது, இருக்காது. அவன் செல்ல நாய் அவனைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. தொங்கிக் கொண்டிருந்த அதன் நாவில் இருந்து ஒரு சொட்டு உமிழ்நீர் தரையில் விழுந்து உடனே ஆவியாகிக் கரைந்தது...
அவன் ஏக்கத்துடன் பாட்டிலைப் பார்த்தான். அந்தக் கடைசி வாயையும் குடித்து விட்டால் தமிழகத்தில் எந்த மூலையிலும் ஒரு சொட்டும் கிடைக்காது என நினைக்கையில் அவனை அறியாமல் அவன் உடல்
எனக்கு கொஞ்சம் தயக்கம்தான். சொல்வதா வேண்டாமா என்று. எவ்வளவு நாள்தான் தனிமையில் புலம்பிக் கொண்டிருப்பது.. யாரும் நான் சொல்வதைக் கேட்பதில்லை… நானும் அதே இடத்திலிருந்து கத்திக் கொண்டுதான் இருக்கிறேன்…
எவ்வளவு அழகான ஊர் அந்த அறுபது எழுபதுகளில். மிகக் குறைந்த ஜனத்தொகை. சென்னைதான். அதிலும் அந்த மாம்பலமும் பழைய மாம்பலமும்… இரண்டையும் பிரிக்கும் அந்த தண்டவாளங்கள்… “போய்ங்க்” என்ற ஒலியுடன் செல்லும் அந்த மின்சார இரயில். துரைசாமி தெருவுக்கும் பிருந்தாவன் தெருவுக்கும் இடையே இரயில்வே கேட்.. ஆரம்பத்தில் திறந்து மூடுவதுமாய் இருந்தது பிறகு ஏத்தி இறக்குவதுமாய் மாறியது.. மூடியிருக்கும்போது எப்பொழுது த
நடமாடும் நதிகள் - ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 4
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
இந்த தொடரில் எழுத போகும் பட்டியல்:
- அகன் - (06-FEB-2016)
- ஆண்டன் பெனி - (07-FEB-2016)
- கவிஜி - (08-FEB-2016)
- ராஜன் - (09-FEB-2016)
- கருணா - (10-FEB-2016)
- சந்தோஷ் குமார் - (11-FEB-2016)
- பழனி குமார் - (12-FEB-2016)
- சுஜய் ரகு - (13-FEB-2016)
- ஜின்னா - (14-FEB-2016)
- கட்டாரி சரவணா - (15-FEB-2016)
- ஷ்யாமளா - (16-FEB-2016)
- மணிமீ - (17-FEB-2016)
- கனா காண்பவன் - (18-FEB-2016)
- ஷாந்தி - (19-FEB-2016)
- உமை - (20-FEB-2016)
- குமரேசன் கிருஷ்ணன் - (21-FEB-2016)
- ஜோசெப் ஜூலியஸ் - (22-FEB-2016)
- நிலா கண்ணன் - (23-FEB-2016)
- முரளி TN - (24-FEB-2016)
- கார்த்திகா AK - (25-FEB-2016)
- கவித்தா சபாபதி - (26-FEB-2016)
- மதிபாலன் - (27-FEB-2016)
- கருகுவெலதா - (28-FEB-2016)
- மனொரெட் - (29-FEB-2016)
- பிரியா ஐசு - (01-MAR-2016)
- வேளாங்கண்ணி- (02-MAR-2016)
- புனிதா வேளாங்கண்ணி - (03-MAR-2016)
- இனியவன் - (04-MAR-2016)
- நாக ராணி மதனகோபால் - (05-MAR-2016)
- கயல்விழி - (06-MAR-2016)
- கே.விக்னேஷ் - (07-MAR -2016)
- ஆதிநாடா - (08-MAR -2016)
- செல்வ முத்தமிழ் - (09-MAR -2016)
- நாராயண சுவாமி ராமச்சந்திரன் - (10-MAR-2016)
- அனு ஆனந்தி - (11-MAR-20156)
- ஜெய ராஜ ரத்தினம் - (12-MAR-2016)
- எசேக்கியல் காளியப்பன் - (13-MAR-2016)
- விவேக் பாரதி - (14-MAR-2016)
- குருச்சந்திரன் கிருஷ் - (15-MAR-2016)
- ஸ்ரீ மதி மகாலட்சுமி - (16-MAR-2016)
- மணி அமரன் - (17-MAR-2016)
- அமுதா அமுதா - (18-MAR-2016)
- பனிமலர் - (19-MAR-2016)
- திருமூர்த்தி - (20-MAR-2016)
- சாய்மாரன் - (21-MAR-2016)
- நித்ய ஸ்ரீ - (22-MAR -2016)
- சேகுவாரா கோபி - (23-MAR -2016)
- ராஜ்குமார் -(24-MAR -2016)
- காஜா - (25-MAR -2016)
- தேனீ எஸ் கார்த்திகேயன் -(26-MAR-2016)
- ஆசை அஜீத் - (27-MAR-2016)
- KR ராஜேந்திரன் - (28-MAR-2016)
- சக்கரை வாசன் - (29-MAR-2016)
- மலர் (சாமிநாதன்) - (30-MAR-2016)
- பொள்ளாச்சி அபி - (31-MAR -2016)
- இந்த தொடரில் வரும் அனைத்து படமும் இங்கே பதிந்துள்ள முறைப்படி இந்த படம்தான் வர வேண்டும்...
- ஒவ்வொரு நாளும் இந்த படத்தை யார் எழுத போகும் என தோழர் முரளி அவர் ஒரு நாளைக்கு முன்பாகவே அவர் எண்ணத்தில் தெரிவிப்பார் (எடுத்துக் காட்டுக்கு மேலே உள்ள படத்தை போல) அந்த படத்தை பதிவிறக்கம் செய்து தாங்கள் எழுதும் போது பதிய வேண்டும்...
- அவரவர் கவிதை பதியும் போது இங்கே கொடுக்கப் பட்டுள்ள படத்தைதான் பதிய வேண்டும். வேறு படத்தை பதிக்க கூடாது. அவரவர்களுக்கு இந்த படத்திற்கு அவரவர் பெயர்கள் பதித்து தயார் செய்து வைத்தாகி விட்டது. ஆனால் ஒவ்வொரு நபரும் தாங்கள் பதிய போகும் முதல் நாள் முரளி சாரின் எண்ணத்தை பார்க்க வேண்டும். அதில் அவர் அன்று எழுதிய நபரை பற்றியும் நாளை எழுத போகும் நபரை பற்றியும் ஒரு தகவல் அளிப்பார். அதில் அடுத்த நாள் எழுத போகும் நபருக்கான படத்தை அவர் பெயரோடு பதிவிடுவார். அந்த படத்தை எடுத்து தாங்கள் பதிவிடும் கவிதைக்கு படமாக பதிவிட வேண்டும். உதாரணமாக இப்போது அகன் அய்யாவின் பெயர் தாங்கிய படம் ஒன்றை பதிவிட்டு உள்ளேன். அதை அவர் பதிவிறக்கம் செய்து அவர் கவிதை பதியும் போது பதிய வேண்டும்.
- நாம் கொடுத்துள்ள படத்தை தவிர வேறு எந்த படமும் பதிவிட கூடாது.
- அதே போல நாம் கொடுத்த தலைப்பை தவிர வேறு தலைப்பையும் பயன்படுத்த கூடாது.
- இந்த தொடரில் எழுதும் அனைவரும் அவரவர் வரிசை எண்ணிற்கு இணங்க சரியான தலைப்பை பதிவிட வேண்டும். உதாரணமாக எனது வரிசை எண் 9 என்றால் எனது தலைப்பு நடமாடும் நதிகள் - 9 என்று பதிய வேண்டும்.
- அவரவர்கள் அவர்களின் தேதியில் மட்டுமே பதிய வேண்டும். வேறு ஒருவரின் தேதியிலோ அல்லது வரிசை எண்ணிலோ பதிய கூடாது. ஒருவர் அவரின் தேதியில் பதிய தவறினால் அவருக்கு வேறு தேதி ஒதுக்க பட மாட்டாது. மேலும் அவருக்கு இந்த தொடரில் எழுத வாய்ப்பும் அளிக்கப் பட மாட்டாது. வேண்டுமென்றால் அடுத்த தொடரில் எழுத வாய்ப்பளிக்க முடியும்.
- ஒரு பத்தி கண்டிப்பாக மூன்று வரிகளுக்கு மேல் இருக்க கூடாது.
- அதிக பட்சமாக 10 பத்திகள் எழுதலாம். அதாவது 30 வரிகளுக்கு மிகாமல் தங்கள் படைப்பு இருத்தல் வேண்டும். அப்படி 30 வரிகளுக்கு மேல் எழுதுபவர்களுக்கு அடுத்த கட்ட நகர்த்தலுக்கு அந்த படைப்பை எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த தொடருக்காக படத்தை தந்த எனது நண்பர் கமல் காளிதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி...
வாழ்த்துக்கள் அனைவருக்கும்,
வளர்வோம் வளர்ப்போம்....
=========================
ஊடகங்கள் தேசத்தின் பொதுவாய்.
= உண்மையை பேசக்கூடாது மெதுவாய்
நாடகங்கள் நடத்துவோர்க் கேதுவாய்
=நடந்துகொள கூடாதுவிலை மாதுவாய்
ஆடவைக்கும் ஆட்சிக்குத் தோதுவாய்
=அடங்கிவிடக் கூடாதுவெறும் சாதுவாய்
ஏடறியா பாமரரின் தூதுவாய்
=எப்பொழுதும் திறக்கணுமதன் தர்மவாய்
.
புதுமைகளை சமைக்கின்ற கருவாய்
=புரட்சிக்கு வித்து திர்க்கும் தருவாய்
எதுவரினும் பயங்கொள்ளா உருவாய்
=இச்சமூக வேர்களுக்கு எருவாய்
மதுகுடித்து அழியுமூர் திருவாய்
=மாற்றத்தைக் காண்பதற்கு நுழைவாய்
இதுவென்று வழிகாட்டி விடும்வாய்
=என்றிருக்கணு மல்லவாவதன் கண்வாய்
.
பெண்பிள்ளை அடைந்துவிடும் ரு
ஆரம்பக் கல்வி ஆங்கிலத்தில் இருக்க 'தமிழ்' ஒரு பாடம் மட்டும்.. மேலும் ஐந்தாம் வகுப்புவரை வேறு மாநிலத்தில் வேறு மொழி படிக்க அடித்தளம் இல்லாத கட்டிடம் போலவே என் 'தமிழ்' ஆறாம் வகுப்பில் ஆரம்பமானது.. தாய்மொழி தமிழாகையால் வார்த்தைகள் எல்லாம் பரிச்சயம்... எழுத்துக்கள் ஒரு அட்டையில் அம்மா.. ஆடு படங்களுடன் உயிர் எழுத்துக்களூம் அதன் பின் பக்கம் மெய்/உயிர் மெய் எழுத்துக்களும், தமிழ் 'வடிவமாக' அறிமுகம் ஆரம்பம்..
எனினும், 64 வயதில் ஏற்பட்ட ஒரு உந்துதலில் தமிழ் எழுத ஆரம்பிக்க இப்பொழுது தினம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.. என் ஆரம்பக் கட்ட அல்லல்களைக் கண்ட நண்பன் ஒரு அகராதி பரிந்துரைத்து வாங்க வைத்தான்.. இப்ப
முகமது பின் துக்ளக் - திரைப்படம் எனக்கு ரொம்ப நாட்களாகவே முகமது பின் துக்ளக் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இந்த வாரம் தான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிட்டியது. சிறுவயதில் அப்பாவுடன் சேர்ந்து தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தைப் பார்த்ததாக ஞாபகம்; அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் இன்று பார்க்கும் பொழுது தான் முழுப்படமும் புரிந்ததாகத் தோன்றுகிறது.
இத்திரைப்படம் பன்முக திறமை கொண்ட நடிகர், பத்திரிக்கை ஆசிரியர், வழக்கறிஞர் திரு. சோ ராமசாமி அவர்களின் எழுத்து, இயக்கத்தில் 1971ம் ஆண்டு வெளிவந்தது. ஏறக்குறைய இன்றுடன் 45 ஆண்டுகளாகியும் இன்றும் ரசிக்கும்படியாக உள்ளது. ஆண்டுதோறும் எத்தனையோ திரைப்படங்கள் வந்து சென்றாலும், அவற்றுள் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தால் அழியாமல் மக்கள் மனதில் நிற்கிறது. அத்தகைய திரைப்படங்களுள் சோ அவர்களின் முகமது பின் துக்ளக் திரைப்படம் நிச்சயம் இருக்கும்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிக்கும்படியாக இருப்பதுதான் இப்படத்தின் தொடர் வெற்றியாக நான் உணர்கிறேன். சுல்தானாக வரும் சோ அவர்களின் அரசியல் நையாண்டி, கிண்டல், கேலி படம் முழுவதும் பயணிக்கிறது. படத்தின் மிகப் பெரிய பலம் அதில் வரும் வசனங்கள். முதலில் நகைச்சுவைப் படமாகத் தோன்றினாலும், அதில் கூறப்பட்டிருக்கும் அரசியல், சமூகம் சார்ந்த கருத்துகள் எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தி நிற்பதோடு நம்மை சிந்திக்கவும் வைக்கிறது.
நாட்டின் முக்கியப் பிரச்சனைகளான அரசியல், தேசிய மொழி பற்றிய குழப்பம், தேர்தல், அரசியல்வாதிகளின் தவறான போக்கு, மக்களின் முட்டாள்தனம், வரி விதிப்பு, வேலை வாய்ப்பின்மை (unemployment), லஞ்சம் (bribe) போன்றவற்றை அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
சோ அவர்களின் நடை, உடை, பாவனை போன்றவை அனைத்தும் பாராட்டத்தக்கது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் வசனங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நாடித் துடிப்பைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். அதிகாரத் தோரணையில் யார் பேசினாலும் மக்கள் அடங்கிப் போய் அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள் என்பதை நேர்த்தியாகக் காட்டியுள்ளார்.
படத்தில் வரும் முக்கியக் காட்சிகளை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, வாசகர்களுக்கு எளிமையாக்கும் விதத்தில் இங்கு காணொளியாக இணைத்துள்ளேன்.
வரி விதிப்பைப் பற்றியும், அதை ஏன் தடுத்து நிறுத்த முடியாது என்பது பற்றியது:
நாட்டின் முன்னேற்றம், சரித்திரங்கள் சொல்வது, மாணவர்களும் அரசியலும், இந்தி தேசிய மொழியாவது பற்றியது:
(போலி) அரசியல்வாதிகளின் பொதறிவு, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், அவர்களின் போலி சமூக அக்கறை, தகுதியில்லாதவன் தலைவனாகிப் பதவிக்கு வருவது, அடுக்கு மொழிப் பேச்சுக்கள், ஓட்டு கேட்கும் முறை, மக்களின் முட்டாள்தனம்:
சர்வாதிகாரத்திற்கும் குடியாட்சிக்குமுள்ள வேறுபாடு:
மொழிப் பிரச்சனை (தேசிய மொழி பற்றிய குழப்பம்), பாராளுமன்றத்தின் நிலை:
கலவரத்தைத் தடுத்து நிறுத்தவதற்கு எடுக்கப்படும் தற்காலிக முடிவுகள் (நிரந்தரத் தீர்வுகள் என்றும் கிடையாது):
லஞ்ச ஒழிப்பு, மக்களின் அறியாமை, உணவுப் பிரச்சனைக்குத் தீர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்:
தலைவர்களின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம்:
செக்ஸ் கல்வி, வயோதிகத்திலும் ஆசை:
இப்படி சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும், அரசியல்வாதிகளின் தவறுகளையும், மக்களின் முட்டாள்தனத்தையும் அழகாகவும், சுவாரசியமாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
படம் வெளிவந்து ஏறக்குறைய 50 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், இன்னும் அதே நிலை தான் தொடர்கிறது. முகமது பின் துக்ளக் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
சிவப்புநிறத் திரவம்
ஊற்றப்பட்டிருந்தது.
(ரெட் ஒயின் எனவும்
பெயரிட்டுக்கொள்ளவும் )
அதிலென் தனிமையினை
நனைத்துக்கொண்டிருந்தப்போது
ரவிவர்மன் ஒவியத்திலுள்ள
அந்தப் பேரழகி
என் பின்னங்கழுத்தினை
இறுக இறுகப்பிடித்து
அவளின் மார்பகபிரதேசத்தில்
ஒடவிட்டுக்கொண்டிருந்தாள்.
இருவிதமான போதைகளுக்கு
மத்தியில்
தெளிவில்லாமல்
தெளிவாகி ஓடியதெனது
ஆசைப்புரவியினை
நடுநிசி நாய்கள்
வழ் வள் என குரைத்து
திசைத்திருப்பிவிட
ஓவிய பேரழகி மீண்டும்
சுவற்றுப்படமாகி
ஏமாற்றிவிட்டாள்.
.
எரிச்சல் மேலோங்கி
என் ஆழ்மனப் பேராசைகள்
குமுறிய பேரலையென
ஆவேச சிகரெட் ஒன்றினை எரித்து
தானாகவே அமைதியாக அணைந்தது.
வடகிழக்குத் தென்றலொன்று
என் தனிமைச் சாளரத்தை
முட்டி மோதி
தட்டிக் கத்தியது.
அட......என்ன இது மாயை?
இந்த நினைவுப் பேய்களின்
தொந்தரவு தாளமுடியவில்லையென
மீண்டுமொரு
நிறமற்ற கோப்பையில்
நிறமுள்ள மதுவை
ஊற்றி நிரப்பி
இதழில் கவ்வி கவ்வி
இரவை போதையாக்கி
விடியலில் தெளிவுற்றப்போதுதான்
எனக்குத் தெளிந்தது
நேற்று....
நான் யாருமற்ற
புறக்கணிப்பு விடுதியில்
தனிமைத்தனலில்
ஏக்கத்தின் கோப்பைக்குள்
சாம்பலாகினேன் என.......!
**
-இரா.சந்தோஷ் குமார்
குரோதத்தின் கண் குடிபுகா வண்ணம்
காமத்தின் கண் கட்டுறா வண்ணம்
பாசத்தின் கண் பற்றாகா வண்ணம்
நேசத்தின் கண் நெகிழா வண்ணம்
ஆசையின் கண் அசைவுறா வண்ணம்
இச்சையின் கண் இசைந்திடா வண்ணம்
ஈசனின் கண் மாத்திரம் அடியேன் சிந்தை
ஈடுபட சித்தம் கொள்ள வேண்டுமே
தில்லைஅம்பல நடராஜா
*** கருவுண்டு இசையுண்டு
வசையுண்டு வெகுண்டு
துவண்டு மருண்டு
ஆசை அறுபட்டு
பின் சிவன்வசம் சரன்புகுவதே
மானுட நியதி .
சிற்றம்பலம்