சிரி

ஹீரோ ஏழை...
சின்ன வயசுல படிக்க வசதியில்ல...

ஹீரோயின் பெரிய படிப்பு படிச்ச வசதியானவங்க..

காதல்னு வந்துட்டா இதெல்லாம் பொருட்டே இல்ல...

ஹீரோ முடிவெடுக்கறார்... நாமளும் அவங்க அளவு உயர்ந்த பின்தான் காதலை சொல்வதென்று.

உடனே சட்டக் கல்லூரில சேர்ந்து இன்ஞினியராவுதுன்னு முடிவு பண்ணிடறார்... அப்பிடியே சைடுக்கா வெளிநாடு சென்று ஆராய்ச்சி செய்து டாக்ட்ரேட் வாங்கிடறார்.

"அல்லாத்தையும் ஒரே சாங்குல சொல்றோம்...."

"அண்ணே ஒரு சஜ்ஜசன்.. "

"சொல்லு..."

"வெளிநாடு போவதால நல்ல லொகேசன்ல ஒரு டுயட்..."

"ஒன் ஆசைய ஏன் கெடுக்கணும் கனவு சீனா வச்சிடுவோம்....."

"நன்றிணே..!"

-----முரளி

எழுதியவர் : (10-Jan-20, 12:14 pm)
சேர்த்தது : முரளி
பார்வை : 145

மேலே