நகைச்சுவை

ஒரு 'சினிமா பத்திரிகையின் நிருபர்
தந்தையாக நடித்து தேசிய விருது
பெற்றவரை பெட்டிக்கு காண ......

நிருபர் : ஐயா இந்த 'குரு' படத்தில்
தந்தையாய் நடித்து வெளுத்துக் கட்டினீர் போல இருக்கு ....... இதைப் பற்றி நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீரா

நடிகர் ; நான் இதில் 'நடிக்கவே' இல்லை
நான் வெறும் நானாக ஒரு தந்தையாய்
நினைத்து கேமரா முன் நின்றேன்
டைரக்டர் சொன்னதை செய்தேன்
பேசினேன் அவ்வளவே....
பிரிவியூ வில் பார்த்தேன் ......
என்னுள் ஒளிந்து கிடந்த தந்தையை
நானே திரையில் பார்த்தேன்'''
அசர்ந்தேன்.......

மற்றபடி நான் ஒரு நடிகனாய்
நடிக்காத ஒரே படம் இது
எனக்கு விருது கிடைத்தது


நிருபர் : மிக்க நன்றி தந்தையே.... இல்லை
ஐயா சுதீரன் அவர்களே (நடிகர்
சுதீரன்).....
( தந்தையே என்று கூறி அழைக்கும்
விதத்தில் சுதீரன் நடித்திருக்கிறார்
இல்லை அவரே தந்தையாகி
விட்டதை உணர்கிறார் நிருபர் )

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Jan-20, 1:29 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 307

சிறந்த நகைச்சுவைகள்

மேலே